பொங்கல் உணவிற்கு ஏற்ற இந்த துவரம் பருப்பு, கத்தரிக்காய் சாம்பாரை ஒரு முறை செய்து வைத்தால் போதும், பொங்களுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் இருக்கும்

sambar
- Advertisement -

பொங்கல் உணவு தமிழ் குடும்பங்களில் மார்னிங் பிரேக் ஃபாஸ்டில் கட்டாயம் இடம் பிடிக்கிறது. நெய், முந்திரி போன்ற உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே போல் அதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் இஞ்சி செரிமானத்திற்கு உதவும். பொங்கலுக்கு சட்னியை விடவும் சாம்பார் தான் அதிக ருசி கொடுக்கும். சாம்பாரில் பல வகையுண்டு. டிபன் சாம்பார், தாளித்த சாம்பார், பிளைன் சாம்பார், மிளகாய்சாம்பார், காய்கறி சாம்பார், புளி சாம்பார் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் பொங்கலுக்கு சில குறிபிட்ட பக்குவத்தில் சாம்பார் வைத்தால் ருசியாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக கத்திரிக்காய் சேர்த்து வைக்கும் சாம்பார் பொங்கலுக்கு தனி ருசி தரும். பெரும்பாலான ஹோட்டல்களில் கத்திரிக்காய் சாம்பார் தான் பொங்கலுக்கு அதிகம் பரிமாறப்படும். அந்த சாம்பாரை எப்படி வைப்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 150 கிராம், கத்திரிக்காய் – 6, தக்காளி – 3, வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் _ 3, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கடுகு– அரை ஸ்பூன், உப்பு _ ஒரு ஸ்பூன் கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, எண்ணெய் – நான்கு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் குக்கரில் துவரம் பருப்பை சேர்த்து அதனை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு 20 நிமிடத்திற்கு துவரம் பருப்பௌ ஊறவைத்து, அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் தக்காளி மற்றும் வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

பிறகு பூண்டை தோல் உரித்து சேர்க்க வேண்டும். அதன் பிறகு நறுக்கிய கத்திரிக்காய், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்பு குக்கரை மூடி, அடுப்பின் மீது வைக்க வேண்டும். குக்கரில் பிரஷர் வந்ததும் குக்கர் விசிலை போட்டு, 4 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பருப்பு வெந்ததும், அதை நன்கு கடைந்துக் கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம்,  இந்த சாம்பாருக்கு புளி மற்றும் மிளகாய் தூள் சேர்க்க கூடாது. புளிப்புக்கு தக்காளி சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்போது அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.

கடாய் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இறுதியாக இதனுடன் ஒரு கொத்து கொத்தமல்லி தலையையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இந்த தாளிப்பை சாம்பாரில் கொட்டி கிளறி, இறக்கினால் சூப்பரான டேஸ்டியான பொங்கல் சாம்பார் தயாராகி விடும். ஒரு முறை இப்படி சாம்பார் செய்து அதனை உங்களுடன் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். இனி அடிக்கடி உங்கள் வீட்டில் பொங்கல் செய்யும் பொழுதெல்லாம் இந்த சாம்பாரை தான் செய்வீர்கள்.

- Advertisement -