வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம். தக்காளி மட்டும் இருந்தால் போதும். இந்த சுவையான தக்காளி குருமாவை உடனே செய்திட முடியும்

thakkali-kuruma1
- Advertisement -

தினமும் சாம்பார், காரக்குழம்பு, குருமா இவ்வாறு விதவிதமான குழம்புகள் சமைத்துக் கொண்டிருக்கின்றனர். என்றாவது ஒருநாள் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜில் காய்கறி இல்லை என்றால் சற்று குழப்பமான நிலைமை உண்டாகும். இன்று மதிய உணவிற்கு என்ன குழம்பு வைப்பது என்று. ஆனால் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் காய்கறிகளை விட தக்காளி மற்றும் வெங்காயம் அதிகமாக இருக்கும். அப்படி தக்காளி மட்டும் இருந்தால் போதும். உடனே இந்த சுவையான தக்காளி குருமா செய்து அசத்திட முடியும். இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்து விடும். இதனை சமைக்கும் போதே இன்று என்ன சமையல் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த சுவையான தக்காளி குருமாவை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

avarai-sambar3

தேவையான பொருட்கள்:
சோம்பு – ஒரு ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 ஸ்பூன், பூண்டு – 15 பல், தேங்காய் – கால் மூடி, எண்ணெய் – 5 ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, பிரியாணி இலை – 3, லவங்கம் – 5, வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, தக்காளி – 5, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு கால் மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கசகசா, 2 ஸ்பூன் பொட்டுக்கடலை மற்றும் துருவிய தேங்காய் இவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு, பின்னர் இவற்றை வேறு தட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

tomato

இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மீண்டும் கடாயை அடுப்பின் மீது வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை, பிரியாணி இலை மற்றும் லவங்கம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, இதனுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து தட்டுப் போட்டு மூடி கொதிக்க விடவேண்டும். இவை நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு முறை கலந்து விடவேண்டும்.

thakkali-kuruma

பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி சிறிது நேரம் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான தக்காளி குருமா தயாராகிவிட்டது. இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து ஒருமுறை சுவைத்துப் பாருங்கள். பிறகு மீண்டும் அடிக்கடி இந்த குருமாவை செய்து கொண்டே இருப்பீர்கள்.

- Advertisement -