10 சிறுசிறு சமையல் சந்தேகங்களுக்கான இந்த விடைகளை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

mudakathan-chutney
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு இருக்கும் சமையல் சந்தேகங்களுக்கான சிறுசிறு கேள்விகளும், விடைகளும் இந்த பதிவின் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்த சமையலை விட, ஆல்ட்டர்நேட்டிவ் ஆக சில விஷயங்கள் இருக்கலாம். சமையல் நிபுணர்கள் சொல்லும் இந்த இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். இனிய சமையலுக்கான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக!

குறிப்பு 1:
பன்னீர் தயாரிக்கும் பொழுது எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் ஒரு விதமான புளிப்பு தன்மை நீங்குவதில்லை! இதற்கு பதிலாக வினிகர் சேர்த்து பாலை திரித்து பன்னீர் தயாரித்தால் இந்த பிரச்சனை வராது.

- Advertisement -

குறிப்பு 2:
பித்தத்தை தணிக்கும், முடக்கு வாதத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை கொண்டு தோசை செய்வது வழக்கம். அதற்கு பதிலாக அந்த கீரையில் ரசம், வடை, அடை, சூப், குழிப்பணியாரம் கூட செய்து சாப்பிடலாம், ரொம்பவே அருமையாக இருக்கும்.

குறிப்பு 3:
குருமாவுக்கு தேங்காய் அரைத்து ஊற்றும் போது கசகசா சேர்க்க வேண்டும். ஆனால் கசகசா சரியாக அரைபடுவது இல்லை என்றால் இதற்கு சிறிது சுடு தண்ணீரில் கசகசாவை ஊற வைத்து பிறகு தேங்காயுடன் சேர்த்து அரைத்து பாருங்கள், நைஸாக அரைபட்டு விடும்.

- Advertisement -

குறிப்பு 4:
மஸ்ரூம் சமைப்பவர்கள் அதை நீண்ட நேரத்திற்கு கறுத்து போகாமல் இருக்க அரை லிட்டர் தண்ணீரில் மைதா மாவு ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் மஷ்ரூமை போட்டு வைத்தால் நீண்ட நேரம் நிறம் மாறாமல் கறுத்துப் போகாமல் அப்படியே இருக்கும்.

குறிப்பு 5:
சட்னி அரைக்கும் பொழுது தவறுதலாக நிறைய தண்ணீர் சேர்த்து விட்டால் வடிகட்டி அல்லது மெல்லிய துணியை பயன்படுத்தி அதிகப்படியான தண்ணீர் வடிந்ததும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய வேறு வழியில்லை.

- Advertisement -

குறிப்பு 6:
காலிஃப்ளவரில் இருக்கும் சிறுசிறு புழுக்கள் என்னதான் சுடுதண்ணீரில் போட்டாலும் பிரியாமல் ஒட்டிக் கொண்டிருந்தால், இப்படி செய்து பாருங்கள். வெது வெதுப்பாக இருக்கும் தண்ணீரில் கொஞ்சம் வினிகரை ஊற்றி காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு வடிகட்டி விட்டு மீண்டும் இதே போல் செய்தால் புழுக்கள் ஒன்று கூட அதில் தங்காது! வினிகருக்கு பதிலாக கல் உப்பும் பயன்படுத்தலாம்.

குறிப்பு 7:
கருணை கிழங்கு சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் என்று கூறுவார்கள். இப்படி நாக்கு அரிக்காமல் இருக்க கருணைக்கிழங்கை வெட்டிய பிறகு அரிசி கழுவிய தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு புளித் தண்ணீரில் வேக விட்டு எடுத்து சமைத்தால் இந்த பிரச்சனை தீரும்.

குறிப்பு 8:
பாகற்காய் கசப்பு இல்லாமல் சமைப்பதற்கு முதலில் புளித் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வடிகட்டி கொஞ்சம் வெல்லமும், தாயிரும் சேர்த்து சமைத்தால் கொஞ்சம் கூட கசப்பு தெரியாது.

குறிப்பு 9:
பஜ்ஜி உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவுடன் சோடா உப்பு சேர்ப்பார்கள். அதற்கு பதிலாக மிளகு தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பஜ்ஜி சுட்டு பாருங்கள், சூப்பராக இருக்கும். வாழைக்காய் மட்டுமல்லாமல் புதிதாக பிரட்டு, கத்தரிக்காய், காலிஃப்ளவரில் கூட பஜ்ஜி செய்யலாம்.

குறிப்பு 10:
துவரம் பருப்பில் சரியான அளவில் நீர் சேர்க்கா விட்டால் வேக நீண்ட நேரம் எடுக்கும். அதிக தண்ணீர், குறைவான தண்ணீர் இரண்டுமே சரிவராது! வெண்ணை போல குழைந்து வருவதற்கு, கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்க்கலாம். அதற்கு பதிலாக ஒரு துண்டு தேங்காயையும் சேர்த்து வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.

- Advertisement -