சமையலுக்கு முக்கியமான இந்த 5 குறிப்புகளை தெரியாதவர்கள் தெரிந்து வைத்திருந்தால் நீங்களும் சமையல் கில்லாடி ஆகலாமே!

ginger-garlic-maavu-potato
- Advertisement -

சமையலுக்கு பயன்படுத்தும் இந்த முக்கியமான பொருட்களை சரியான முறையில் கையாளும் பொழுது அதனை நீண்ட நாட்களுக்கு வைத்து பராமரிக்க முடியும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைப்பதாக இருந்தாலும், அதை எவ்வளவு அளவில் அரைக்க வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை. மிக்ஸியில் மாவு அரைப்பவர்கள், கேரட், மல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றை பராமரிப்பவர்கள், உருளைக்கிழங்கு கறுத்துப் போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற எளிதான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு 1:
சமையலுக்கு எப்பொழுதும் நீங்கள் இஞ்சி, பூண்டு பேஸ்ட் வீட்டிலேயே அரைத்து பயன்படுத்துவது தான் நல்லது. அப்படி அரைத்து பயன்படுத்தும் பொழுது எந்த அளவில் அரைக்க வேண்டும்? என்கிற குழப்பம் உண்டாகும். 100 கிராம் இஞ்சித் துண்டுகள் எடுத்தால், அதே 100 கிராம் அளவிற்கு பூண்டும் இருக்க வேண்டும். சரிசமமான அளவுகளில் அரைக்கும் பொழுது அதனுடைய ருசி அபரிமிதமாக இருக்கும். ஒன்று ஏறக்குறைய இருந்தாலும் சுவை மாறிவிடும். முதலில் இஞ்சி போட்டு அரைத்த பின்பு பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும்.

- Advertisement -

நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும், இதில் பூஞ்சைகள் பிடிக்காமல் இருக்கவும் கால் டீஸ்பூன் அளவிற்கு கொஞ்சமாக மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கடைசியாக ஒருமுறை நன்கு அரைத்து டப்பாவில் அடைத்து வைத்து பிரிட்ஜில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனாலும் அது கெட்டுப் போக வாய்ப்பே இல்லை! தேவையான பொழுது எடுத்து பிரஷ்ஷாக பயன்படுத்திக் கொள்ளலாம். இஞ்சி, பூண்டு விழுதை எப்பொழுதும் ஃப்ரீஸருக்கு அடியில் இருக்கும் பால் பண்டங்கள் வைக்கும் டிரேயில் வைத்தால் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும். பால் டிரெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மட்டுமல்லாமல், தேங்காய் மூடியுடன் அப்படியே கவிழ்த்து வைத்தால் நீண்ட நாட்கள் தேங்காய் கெடாமல் இருக்கும்.

குறிப்பு 2:
உருளைக்கிழங்குகளை வெட்டிய உடனேயே சமைக்க வேண்டியிருக்கும். இல்லை என்றால் அதில் கறுமை படர்ந்த விடக்கூடிய வாய்ப்பு உண்டு. உருளைக்கிழங்கு வெட்டிய பிறகும் நிறம் மாறாமல் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்க, அதனை நறுக்கிய பின்பு அரிசி களைந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இப்படி போட்டு வைத்தால் ஒரு மணி நேரம் ஆனாலும் நிறம் மாறாமல் பிரஷ்ஷாக உருளைக்கிழங்கு துண்டுகள் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 3:
காய்கறிகளில் அதிகம் சமைக்கப்படும் இந்த கேரட் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க அதை வாங்கி வந்த உடன் நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து விட வேண்டும். பின்பு அதன் தலைப்பகுதி மற்றும் வால் பகுதியை மட்டும் நீக்கி அப்படியே ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி பாக்ஸில் அடைத்து வைத்து விட்டால் ஒரு மாதம் ஆனாலும் அது கெட்டுப் போகாது. அந்தப் பகுதிகளில் இருந்து தான் அது அழுக ஆரம்பிக்கும், எனவே அவற்றை நீக்கி விட்டால் தேவையான பொழுது தோல் நீக்கி சமைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு 4:
புதினா, மல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை என்னதான் ஸ்டோர் செய்து வைத்தாலும் நீண்ட நாட்களுக்கு அதை பராமரிக்க முடிவதில்லை என்று புலம்புபவர்களுக்கு சூப்பர் ஐடியா ஒன்று உண்டு. ஒரு கற்றுப்புகாத பாக்ஸில் அடியில் மட்டும் டிஷ்யூ பேப்பர் வைத்தால் போதாது. டிஷ்யூ பேப்பர் மீது வைக்கப்படும் மல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகளை மூடி வைக்க இன்னொரு டிஷ்யூ பேப்பர் அதன் மீது பயன்படுத்துங்கள். அதன் பிறகு மூடி வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.

குறிப்பு 5:
இட்லி, தோசை மாவு அரைக்கும் பொழுது மிக்ஸி பயன்படுத்துபவர்கள் இந்த குறிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு எல்லா இடங்களிலும் தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு ஊற வைத்த உளுந்தை போட்டு இடையிடையே ஜில்லென்று இருக்கும் ஐஸ் வாட்டர் தெளித்து தெளித்து அரைத்தால் பொங்க பொங்க உபரியான உளுந்து மாவு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் மிக்ஸியும் சீக்கிரம் சூடாகாது, அடியில் ஒட்டவும் செய்யாது.

- Advertisement -