சமையல் கலையில் இதெல்லாம் உங்களுக்கு தெரியலையா? அப்படின்னா இந்த 12 ம் தெரிஞ்சு வச்சுக்கோங்க!

chappathi-coconut-onion
- Advertisement -

சமையல் கலையில் மிக முக்கியமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில குறிப்புகளும் உண்டு. அனுதினமும் பயன்படுத்தும் சமையலில் சேர்க்கக்கூடிய பொருட்களை கையாளும் முறை, சில பொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் முறை போன்றவற்றை தெரிந்து வைத்திருந்தால் நமக்கு ரொம்பவே உபயோகமாக இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு தெரியாத இந்த 12 விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு 1:
எப்போதும் முட்டைகோஸை சமைக்கும் பொழுது நீங்கள் ஒரு சிறு துண்டு அளவிற்கு இஞ்சியை துருவி சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
முட்டை வேக வைக்கும் பொழுது விரிசல் விழாமல் இருக்க உங்களிடம் வினிகர் இருந்தால் கொஞ்சம் சேர்த்து பாருங்கள், ஒரு முட்டை கூட உடையாமல் வரும்.

குறிப்பு 3:
ஓவன் பயன்படுத்துபவர்கள் நீங்கள் அதில் கேக் பேக் செய்த பின்பு அப்படியே திறக்காமல் வைத்திருந்து உங்களுக்கு தேவையான நேரத்தில் திறந்தால் சரியாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
இஞ்சி, பூண்டு சட்னி செய்பவர்கள் இஞ்சியை குறைவாகவும் பூண்டை அதிகமாகவும் சேர்த்து செய்து பாருங்கள், 2 க்கு 3 என்கிற விகிதத்தில் சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.

குறிப்பு 5:
முட்டை பழையதா? புதியதா? என்று பார்ப்பதற்கு ஒரு சிறு யோசனை உண்டு! ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்புக் கரைந்த பின்பு முட்டையை போட்டால் முட்டை மூழ்க வேண்டும். மூழ்கினால் புதிய முட்டை என்றும், மிதந்தால் பழைய முட்டை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 6:
ஒரு மாதம் ஆனாலும் பச்சை மிளகாய் அப்படியே கெட்டுப் போகாமல் இருக்க ஒரு பேப்பர் கவரில் சிறு ஓட்டை போட்டு பச்சை மிளகாய்களை வைத்து இரண்டாக மடித்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

குறிப்பு 7:
வெங்காயம் நறுக்கும் பொழுது கண்ணீர் வருகிறதா? ஐந்து நிமிடம் ஐஸ் வாட்டரில் தோலை உரிப்பதற்கு முன்னர் போட்டு எடுத்து பின்னர் தோலுரித்து நறுக்கி பாருங்கள், கண்ணில் கண்ணீர் வராது.

குறிப்பு 8:
கோதுமைக்கு மாவு அரைக்க கோதுமையுடன் கொஞ்சம் சோயாபீன்ஸ் ஐயும் சேர்த்து அரைத்து பாருங்கள் ஊட்டச்சத்துள்ள சப்பாத்திகள் நல்ல ருசியுடன் கிடைக்கும்.

குறிப்பு 9:
ஊறுகாய் செய்யும் பொழுது நீங்கள் மரத்தாலான கரண்டியைப் பயன்படுத்தி செய்து பாருங்கள், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

குறிப்பு 10:
தேங்காயை சரிபாதியாக உடைக்க தெரியவில்லையா? ஒருமுறை தேங்காயை தண்ணீரில் நன்றாக நனைத்து கொள்ளுங்கள். 2 நிமிடத்திற்கு பின்னர் உடைத்தால் சரியாக உடையும். முக் கண்களுக்கு நேராக ஒரு கோடு போல தெரியும். அந்தக் கோட்டில் வைத்து உடைத்தால் கச்சிதமாக உடையும்.

குறிப்பு 11:
பழங்கள், பழச்சாறுகள், சாலட் வகைகள் தயாரிக்கும் பொழுது சர்க்கரை சேர்ப்பதை விட தேன் சேர்த்து செய்து பாருங்கள் ரொம்பவே சுவை அட்டகாசமாக இருக்கும்.

குறிப்பு 12:
கொத்தமல்லி, கீரைத் தண்டுகள், வாழைத்தண்டுகள் போன்றவற்றை வடாமல் பாதுகாக்க அதனை அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வையுங்கள்.

- Advertisement -