ஆபத்து என்று தெரியாமலேயே சமையலில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா? இனியும் இதெல்லாம் செஞ்சீராதிங்க!

- Advertisement -

ஒரு சில விஷயங்களை ஆபத்து என்று தெரியாமலேயே நாம் சமையல் கட்டில் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை சமைக்கும் பொழுது தெரியாமல் சமையல் பொருளில் உப்பு, காரத்தை அதிகமாக சேர்த்து விட்டால் அது பெரிய தவறு ஒன்றும் இல்லை! ஆனால் ருசிக்காகவும், அழகுக்காகவும் நாம் செய்யும் இந்த சில விஷயங்கள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அப்படியான ஆபத்தை உண்டாக்கும் சமையல் சொதப்பல்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
எந்த ஒரு பொருளையும் ஒருமுறை நன்கு அலசாமல் சமையலுக்கு பயன்படுத்த கூடாது. ஓட்டியிலிருந்து பிரித்தெடுக்கும் புளி தானே என்று அதை கழுவாமல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு முறை தண்ணீரில் போட்டு அழுத்தம் கொடுக்காமல் லேசாக அலசி, அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, பின்னர் வேறு தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 2:
பெரும்பாலும் முட்டையை அப்படியே தண்ணீர் ஊற்றி வேக வைப்பது தான் வழக்கம். முட்டை ஓட்டின் மீது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் நடமாடிக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் என்னதான் நல்ல முட்டையாக இருந்தாலும் ஒரு முறை தண்ணீரில் நன்கு அலசி விட்டு பிறகு அதை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

குறிப்பு 3:
கடையில் இருந்து கோழி கறி வாங்கி வந்து அதை சுத்தம் செய்யும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோழிக்கறியை அலசும் பொழுது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரில் கூட எண்ணற்ற பாக்டீரியாக்கள் பரவும். எனவே கோழிக்கறியை அலசும் பொழுது அதிலிருந்து தெளிக்கும் தண்ணீர் பட்ட எல்லா இடங்களையும் சேர்த்து சோப் போட்டு ஒரு முறை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 4:
சமைக்கும் பொழுது உணவு பொருட்களை ஓரளவுக்கு மேல் கருக விடக் கூடாது. அப்படி கருகி, தீய்ந்து போன உணவுப் பொருட்களின் மூலம் நமக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே உணவுப் பொருட்களை ருசிக்காகவும், அழகுக்காகவும் அதிக அளவில் வதக்கி கருக விடக்கூடாது.

குறிப்பு 5:
எந்த ஒரு காய்கறிகளையும் நறுக்கிய பின்பு அதனை பதப்படுத்த ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கக் கூடாது. நறுக்கிய உடன் சமையலுக்கு பயன்படுத்தி விட வேண்டும் அல்லது நறுக்காமல் அப்படியே பிரிட்ஜில் வைக்க வேண்டும். குறிப்பாக வெங்காயத்தை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. வெங்காயம் நறுக்கிய உடன் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை கிருமிகளும் வெங்காயம் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இதனால் நீங்கள் அடுத்து அதை பதப்படுத்தி சமைத்தாலும் அந்த கிருமிகள் போகாது, சமையலில் சேர்ந்துவிடும்.

குறிப்பு 6:
கீரை சமைக்கும் போது அதனுடன் சிலர் புளி சேர்ப்பது உண்டு. கீரையுடன் புளி சேர்க்கக்கூடாது. இஞ்சியை எந்த காரணத்திற்காகவும் தோலுடன் சமைக்கக் கூடாது. இஞ்சியின் தோல் விஷத்தன்மை கொண்டது. ஆனால் பூண்டினை தோலுடன் சமைக்கலாம். அசைவத்தில் கோழிக்கறியை மறுநாள் வரை வைத்திருந்து சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் பொழுது அதனை இரும்பு நார் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யக்கூடாது. நான்ஸ்டிக் கோட்டிங் உரிந்து வந்து நம் வயிற்றுக்குள் சென்றால் அது புற்றுநோயை ஏற்படுத்தும். பூஜை, புனஸ்காரம், விரதங்கள் மேற்கொள்ளும் நாட்களை தவிர மற்ற நாட்களில் ருசி பார்த்த பின்னர் தான் சமையலை முடித்து கொள்ள வேண்டும்.

- Advertisement -