அட! சரவணபவன் ஹோட்டல் ஸ்டைலில் தக்காளி சட்னி அரைப்பது இவ்வளவு ஈஸியா? இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் கார சட்னி ரெசிபி இதோ.

thakkali-chutney
- Advertisement -

சில ஹோட்டல்களில் நமக்கு தக்காளி சட்னி மிக மிக சுவையாக கிடைக்கும். அந்த சட்னியில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவைகள் சேர்த்திருக்கிறார்கள் என்பதே நமக்கு தெரியாது. குறிப்பாக சரவண பவன் ஹோட்டலில் அரைக்கக்கூடிய தக்காளி சட்னி சாப்பிட கொஞ்சம் கூடுதல் ருசி தரும் அல்லவா. அந்த சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட இட்லி தோசை பணியாரம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட இந்த சட்னி சூப்பர் சைடிஷ் ஆக இருக்கும். இதை தக்காளி சட்னி என்றும் சொல்லலாம். கார சட்னி என்றும் சொல்லலாம். அது நம்முடைய விருப்பம் தான். வாங்க அந்த சூப்பரான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்த பூண்டு பல் – 7, வரமிளகாய் – 7, நறுக்கிய பெரிய சைசில் இருக்கும் வெங்காயம் – 1, போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதங்கி வந்ததும் கருவேப்பிலை – 1 கொத்து, நறுக்கிய தக்காளி பழம் – 4, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, போட்டு ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, மேலே ஒரு மூடியை போட்டு தக்காளி வெங்காயத்தை நன்றாக வேக வைக்க வேண்டும்.

தக்காளி பழம் வெந்து வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைத்து விடுங்கள். பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் இதை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

அடுத்து ஒரு கடாயில் – 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு 3 போட்டு, தாளிக்க வேண்டும். அடுத்து வரமிளகாய் 1 கிள்ளி போட்டு, கருவேப்பிலை 1 கொத்து பெருங்காயம் 2 சிட்டிகை சேர்த்து, இந்த தாளிப்பில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து ஒரு நிமிடம் போல சூடு செய்து, அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான தக்காளி சட்னி தயார்.

இந்த சட்னி இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட அவ்வளவு சுவையா இருக்கும். இது காரச் சட்னி என்பதால் இதற்கான காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்கும். காரம் குறைவாக இருந்தால் சட்னியின் சுவை அவ்வளவு ருசியை கொடுக்காது.

- Advertisement -

உங்களுடைய தக்காளி பழம் ரொம்பவும் புளிப்பாக இருந்தால், இந்த சட்னியை அரைக்கும் போது சிறிதளவு வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். வெல்லம் வைப்பதும் வைக்காததும் நம்முடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி

ருசி தரும் இந்த சூப்பர் ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக ஹோட்டலில் வாங்குற கார சட்னியின் சுவை கிடைக்கும்.

- Advertisement -