செல்வம், நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலேயே நம் வீட்டை விட்டு செல்வதற்கு இதுதான் காரணமா? செல்வம் நம்மை விட்டு செல்லாமல் இருக்க என்னதான் செய்வது?

money1

சொல்லாமலே செல்வதால் தான் அதற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது. இதை நாம் திரைப்படத்தில் பாடல்கூட கேள்விப்பட்டு இருப்போம். இது உண்மையான வரிகள் தான். நம்மிடம் வரும் செல்வம், சொல்லிவிட்டு வருவதில்லை. நம்மிடம் இருந்து வெளியே செல்லும் செல்வம் சொல்லிவிட்டும் செல்வதில்லை. இருப்பினும் செல்வம் இல்லாமல் நம்மால் நல்ல வாழ்க்கையை வாழவும் முடிவதில்லை. இது யார் விட்ட சாபமாக இருக்கும்? ஏன் நமக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறது? இதில் இருந்து தப்பிக்க ஆன்மீக ரீதியாக சூட்சும பரிகாரங்கள் ஏதேனும் உண்டா? என்ற கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money

ஒருவரிடம் செல்வம் தங்காமல் இருப்பதற்கு யார் விட்ட சாபம் காரணமாக இருக்கும், என்ற சந்தேகமே தேவையில்லை. நீங்கள் அடுத்தவர்களுக்கு இழைத்த துரோகம் நான், உங்களுக்கு சாதகமாக வரும். அதாவது, எவர் ஒருவர் தனது குருவை மதிக்காமல் துரோகம் செய்கிறார்களோ, அவர்களுக்கு செல்வம் சேராத சாபம் இருக்கும்.

நீங்கள் யாருடைய உறுதுணையை கொண்டு, யாருடைய உதவியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தீர்களோ, அவர்களை உங்களது காலால் எட்டி உதைத்து விட்டு, நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுனீர்கள் என்றால் உங்களிடம் இருக்கும் பணம் வீண் விரயம் ஆவதற்கு, இதுவும் ஒரு காரணம்.

நம்மில் பல பேர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றோம். ஆனால் சில பேர் நல்ல அந்தஸ்தோடு, பணப் புழக்கத்தில் பெரும் பணக்காரர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் மட்டும் அப்படி வாழ்வதற்கு என்ன காரணம். ஒன்று, ஜாதகரீதியாக அவர்களுக்கு சுக்கிரனும் குருவும் பலமாக இருப்பார்கள்.

- Advertisement -

இரண்டாவதாக, அவர்களுடைய குருவுக்கு, அவர்களுடைய முன்னேற்றத்திற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது, அவர்களுக்கான உதவியை நீங்கள் செய்ய வேண்டும். வித்தையைச் சொல்லிக் கொடுத்தவன் தலையிலேயே எப்போதும் கையை வைக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். அது தானே குரு துரோகம். இந்த துரோகத்தை நீங்கள் செய்தீர்கள் என்றால், அவர்களின் சாபம் உங்களை நிச்சயம் சும்மா விடாது.

kadan

நிச்சயம் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு யாராவது ஒருவர் காரணமாக இருப்பார்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தவர்களை நீங்கள் கஷ்டப்பட விடக் கூடாது. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதைப் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் கஷ்டம் இல்லை.

guru-bhagavan

சரி, இதை தவிர பரிகாரம் என்று சொல்லப் போனால், வருமானம் வருகின்றது, ஆனால் வீண் விரையம் ஆகிறது. வருமானமில்லை வறுமையில் உள்ளீர்கள் என்றால், நீங்கள் பெருமாள் வழிபாட்டை தொடர்ந்து செய்துவர வேண்டும். பெருமாள் கோவில்களுக்கு சென்று, அங்கிருக்கும் நவகிரகங்களில் சுக்கிரனை வழிபாடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். முடிந்தால் ஒருமுறை ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

perumal

உங்களுடைய வீட்டில் பணப் பெட்டியில் படத்தை வைக்கும் போது, பணத்தை எடுக்கும்போது குரு பகவானை மனதார நினைத்து கொள்ளுங்கள். இதோடு சேர்த்து ‘ஓம் குரு குரு வர வரத சர்வ ஜனமே வசமானய சுவாகா’ என்ற மந்திரத்தை சொல்லி பண மாற்றம் செய்யும் பழக்கத்தை பழகிக் கொள்ளுங்கள். உங்கள் கையை விட்டு சென்ற பணம் இரட்டிப்பாக மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் தண்ணீர் அதிகம் பயன்படுத்தக் கூடாத இடம் எது தெரியுமா? இங்கு தண்ணீர் சென்று கொண்டே இருந்தால் கடன் பிரச்சினை தலைவிரித்தாடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.