இட்லி தோசைக்கு சூப்பரான காரச் சட்னியை ஒரு முறை இப்படி அரைச்சு பாருங்க. எத்தனை இட்லி சாப்பிட்டீங்கன்னு கணக்கே தெரியாது.

red-chutney
- Advertisement -

கணக்கே இல்லாமல் இட்லியும் தோசையும் சாப்பிட வேண்டும் என்றால் இப்படி ஒரு சட்னியை அரைக்கணும். வெங்காயம் தக்காளி சேர்த்து ஒரு கார சட்னி எப்படி அரைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காரச் சட்னியை அரைப்பார்கள். ஒரு வாட்டி இப்படி காரச் சட்னி அரைச்சு பாருங்க. செம டேஸ்ட்டா இருக்கும்.

red-chutney

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் வரமிளகாய் – 5, மிக சிறிய துண்டு வெல்லம், சீரகம் – 1/2 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், பூண்டு பல் – 6 தோல் உரித்தது, சின்ன வெங்காயம் – 15 லிருந்து 20 பல் தோல் உரித்தது, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, பழுத்த பெரிய தக்காளிப் பழங்கள் – 2 நான்கு துண்டுகளாக வெட்டியது, இவை அனைத்தையும் அந்த மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நைஸாக விழுதுபோல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன் போட்டு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் வெங்காய தக்காளி விழுதை கடாயில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

chutney4

தேவைப்பட்டால் இந்த சட்னியை இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு அப்படியே சாப்பிட்டாலும் சூப்பராக தான் இருக்கும். இல்லை என்றால் இந்த சட்னியை ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் தொக்கு பதம் வரும்வரை, இதில் ஊற்றி இருக்கும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு சாப்பிட்டாலும் இதன் சுவை அருமையாக தான் இருக்கும்.

- Advertisement -

சுண்ட சுண்ட சட்னியை வதக்கி எடுத்து நன்றாக ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் ஆனாலும் இந்த கார சட்னி கெட்டுப்போகாது. மேலே சொன்ன அளவுகளில் உங்களுக்கு உப்பு காரம் கூட குறைய தேவைப்பட்டாலும் அதற்கு தகுந்தார்போல் சேர்த்து இந்த சட்னியை அரைத்துக் கொள்ளலாம். இட்லி தோசைக்கு செம சைட் டிஷ் இது. இதேபோல் சுடச்சுட சாதத்தில் இந்த சட்டையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் அருமையாக தான் இருக்கும்.

தேவைப்பட்டால் வெறும் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த சட்னி அரைக்கலாம். தேவைப்பட்டால் வெறும் பெரிய வெங்காயத்தை வைத்தும் இந்த சட்னியை அரைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த காரச் சட்னி இருந்தால், எத்தனை இட்லி தோசை வைத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -