பல வகையான கஷ்டங்களை சுலபமாக தீர்த்து வைக்கும் ஒரே பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இருக்கும் அனைத்து கஷ்டங்களுக்கும் சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும்.

sivan

நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் நம்மை விட்டு சீக்கிரமே விலகி விட்டால் போதும். நாம் அதிர்ஷ்டகாரர்கள் தான். கஷ்டம் வராமல் ஒருவரால் வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல முடியாது. கஷ்டம் வந்தாலும் அந்த கஷ்டத்தை  எதிர்கொண்டு, அந்த கஷ்டத்திலிருந்து எப்படி விடுபடுகிறோம் என்பதை வைத்து தான் நம் வாழ்க்கை அமையும். ஆக வரக்கூடிய கஷ்டங்களை சமாளிக்க தெரிந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள். கஷ்டத்தைப் பார்த்து பயந்து முடங்கி போய் உட்காருபவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகள் என்றும் சொல்லலாம். இப்படி கோழைத்தனமாக இருப்பவர்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் பின் தொடரத் தான் செய்யும்.

sad

சரிங்க, உங்களோட கஷ்டத்தை சீக்கிரமே நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆக மாற வேண்டும் என்றால் முதலில் மன தைரியத்தோடு செயல்படவேண்டும். இரண்டாவதாக, ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய கஷ்டத்தை போக்குவதற்கு இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் 2 பொருள்தான். ஏலக்காய் 9, வில்வ மரத்தின் வேர் 9 துண்டுகள். ஒரு வில்வ மரத்தின் வேரை எடுத்து ஒன்பது துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம். சிவன் கோயில்களில் வில்வ மரம் இருக்கும். அந்த கோவில்களுக்கு சென்று, அந்த கோவிலை பராமரிப்பவர்களிடம் அனுமதி பெற்று வில்வ மரத்தின் வேரை எடுத்து வரலாம்.

அப்படி இல்லை என்றால் இப்போதெல்லாம் வில்வ மரம் வளர்ப்பதற்காக கடைகளிலேயே சிறிய தொட்டியில் விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். அந்த தொட்டியை வாங்கி அதில் இருந்து வேர் எடுத்தும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -

வாழ்க்கையில் உங்களுக்கு பணவரவு இருந்து கொண்டே இருக்க, வறுமையிலிருந்து நீங்க, மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 9 ஏலக்காய்களையும், வில்வ வேர் 9 துண்டுகளையும் வைத்து முடிச்சுப் போட்டுக் கொள்ளலாம். இந்த முடிவினை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, தீபம் ஏற்றி வைத்து விட்டு, 48 நாட்கள் சிவபெருமானையும் சக்தி தேவியையும் மனதார நினைத்து வேண்டி, கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டால் படிப்படியாக கஷ்டம் குறைய ஆரம்பிக்கும். இந்த பூஜையில் கட்டாயம் ஓம் ‘சிவசக்தியே போற்றி!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பூஜையை வீட்டில் இருக்கும் ஆணும் செய்யலாம். பெண்ணும் செய்யலாம். முடிந்தவரை இந்த பூஜையை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடிப்பது நல்லது.

vilvam

இதேபோல் எதிரி தொல்லையில் இருந்து விடுபட, எதிரியை ஜெயிக்க வேண்டும் என்றால், மேல் சொன்னபடிதான் பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆனால், கருப்பு துணியில் ஏலக்காயையும் வில்வ மரத்தின் வேரையும் முடிந்து வைத்து தினசரி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

marriage

வீட்டில் திருமணத்தடை, குழந்தைப் பேறு இன்மை, போன்ற சுப காரிய தடைகள் இருந்து கொண்டே வந்தால், வெள்ளைப் பட்டு துணியில் இந்த ஏலக்காயையும் வில்வ மரத்தின் வேரையும் முடிந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

kadan

வீட்டில் தீராத கடன் பிரச்சனை கழுத்தை நெரித்து வந்தால், ஒரு சிவப்பு நிற துணியில் ஏலக்காயையும், வில்வ மரத்தின் வேரையும் வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வர வேண்டும்.

sivan-parvathi

இவ்வாறாக பலவகைப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி அந்த 9 எலக்காய்களுக்கும், வில்வமரத்தின் வேருக்கும், சிவசக்தி வழிபாட்டிற்கும் உண்டு. இந்தப் பூஜையை 48 நாட்கள் செய்து முடிந்ததும், அந்த முடிச்சுகள் இருக்கும் ஏலக்காயை எடுத்து ஏதாவது ஒரு இனிப்பு பலகாரத்தை சமைத்து இறைவனுக்கு நிவேதனமாக படைத்து, உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். வில்வ மரத்தின் வேரை ஒரு சிறிய பேப்பரிலோ, சிறிய டப்பாவிலோ போட்டு பணம் வைக்கும் பெட்டியிலோ அல்லது பூஜை அறையிலோ வைத்துக்கொள்ளலாம். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் விரைவாக தீர இந்த பரிகாரம் கைமேல் பலனை கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கணவனின் அன்பை பெற இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாள் இதை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.