10 சின்ன வெங்காயம் இருந்தா போதும் 2 நிமிஷத்தில் தேங்காய் இல்லாமல் இப்படி காரச் சட்னி பிரமாதமா அரைச்சு பாருங்க தட்டு நெறைய இட்லி இருந்தாலும் பத்தாது!

onion-chutney2
- Advertisement -

தினமும் என்னடா சட்னி செய்வது? என்று யோசிப்பவர்களுக்கு இந்த சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கப் போகிறது. சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படும் இந்த காரச்சட்னி ஆரோக்கியம் மிகுந்த ஒன்றாகவும் இருக்கும். காரசாரமாக இட்லி, தோசைக்கு இப்படி ஒரு சட்னியை தொட்டு சாப்பிட்டால் உங்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் போதவே போதாது! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கார சட்னியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சட்டுனு ரெண்டே நிமிஷத்துல குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த கமகமக்கும் காரச் சட்னி வீட்டிலேயே நாமும் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம் வாருங்கள்.

சின்ன வெங்காயம்

கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 8, சின்ன வெங்காயம் – 10, பூண்டு பற்கள் – ஐந்து, தக்காளி – ஒன்று, பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, தாளிக்க: நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் 8 வர மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் சேர்த்தால் நிறம் நன்றாக இருக்கும். எனவே காஷ்மீரி மிளகாய் சேர்ப்பவர்கள் 2 வர மிளகாய்களை குறைத்து அதற்கு பதிலாக காஷ்மீரி மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

milagu-chutney

ஒரு மீடியம் சைஸ் தக்காளியை நான்காக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஒரு கோலி குண்டு அளவு தேவைப்பட்டால் புளி சேர்த்துக் கொள்ளுங்கள். புளி சேர்க்க விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடலாம்.

- Advertisement -

இப்போது நைஸாக மிக்ஸியை இயக்கி நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதினை இப்பொழுது தாளிப்பு செய்ய வேண்டும். அதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி நன்கு காய விடுங்கள். காரச் சட்னிக்கு நல்லெண்ணெய் தான் சூப்பராக இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

chutney1

பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை நன்கு கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த கலவையை ஊற்றி ஒருமுறை இலேசாக நன்கு கொதிக்குமாறு கொதிக்க விடுங்கள். நாம் பச்சையாக அரைத்து உள்ளதால் ஒரு நிமிடம் லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விட்டால் போதும், ரொம்பவே சூப்பரான காரசாரமான, சுவையான ஆரோக்கியம் மிகுந்த காரச்சட்னி தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே முறையில் உங்கள் வீட்டில் செய்து அனைவரையும் அசத்தி விடலாமே!

- Advertisement -