தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேற குலதெய்வத்திற்கு இவ்வாறு பூஜை செய்தால் போதும்

kula
- Advertisement -

பொதுவாக வீடுகளில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கு முன்னரும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அதன் பின்னர் குலதெய்வத்தை வணங்கி அருள் பெற்ற பிறகுதான் அந்த சுபகாரியத்திற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள். ஆனால் ஒரு சிலர் குலதெய்வத்தை வணங்குவது என்பதையே மறந்து விட்டார்கள். சிலருக்கு தங்கள் குலதெய்வம் என்னவென்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். இவ்வாறு குலதெய்வத்திற்கு செய்யவேண்டிய பூஜையை செய்யாமல் இருந்து வந்தோம் என்றால் நாம் செய்யவிருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எந்தவித வெற்றியும் நம்மை தேடி வராது. மேன்மேலும் துன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கும். இவ்வாறான காரிய தடைகள் நீங்கி நன்மை நடைபெற குலதெய்வத்தை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

success

ஒவ்வொருவருக்கும் தன் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும், செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்க வேண்டும், வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும், அனைத்து சகல வசதிகளும் நிறைந்திருக்க வேண்டும் என்ற ஆசைகள் தான் இருக்கும். இவை அனைத்தும் ஈடேற நாம் குலதெய்வத்தை வணங்கினாலே போதும் இவை அனைத்திற்கும் தானாக வழி பிறக்கும்.

- Advertisement -

வீட்டின் நிலை வாசற்படியில் தான் கும்ப தேவதைகளும், குலதெய்வங்களும் வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது முன்னோர்களின் கூற்றாகும். இவர்கள் நம் வீட்டிற்குள் நுழைவதற்கு நாம் செய்ய வேண்டியது பூஜையறை வழிபாடுதான். குலத்தைக் காக்கும் கடவுள் தான் குலதெய்வம் நமது குலத்திற்கு எந்தவித பிரச்சனைகளும், துன்பங்களும் வந்துவிட்டது என்றால் முதலில் ஓடோடி வந்து நிற்பது நமது குலதெய்வம் தான். இந்த குலதெய்வத்தை நமது வீட்டிற்குள் வரவழைக்க

vasal-kathavu

வளர்பிறை நாட்களில் ஏதேனும் ஒரு கிழமையில் விடியற்காலை எழுந்து வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு பூஜை அறையில் இருக்கும் குலதெய்வ படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு வெள்ளைக் காகிதத்தில் நாம் எந்த காரியம் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதனை ஒரே வரியில் எழுதி காகிதத்தை மடித்து குல தெய்வத்தின் முன் வைத்து விடவேண்டும். பின்னர் ஒரு மஞ்சள் துணியில் 5, 11, அல்லது ஐம்பத்தி ஒன்று இவ்வாறான எண்ணிக்கையில் நம்மால் முடிந்த அளவிலான தொகையை முடிச்சாக கட்டி அந்தக் காகிதத்தின் மீது வைத்து விட வேண்டும்.

rolled paper

பின்னர் கைகளைக் கூப்பி நாம் எழுதியிருக்கும் காரியம் தடையில்லாமல் நடந்து முடியவேண்டும் என்று குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை தினந்தோறும் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு பூஜைகள் செய்யும் பொழுது இந்த காரியம் நடக்குமா? நடக்காதா? என்ற மனக் குழப்பம் இல்லாமல் நம்பிக்கையுடன் செய்து வர வேண்டும். எதை நாம் முழுமனதுடன், நம்பிக்கையுடன் செய்கிறோமோ அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

deepam

இவ்வாறு விளக்கு ஏற்றி விட்டோம், குலதெய்வத்திடம் ஒப்படைத்து விட்டோம் என்று அந்த காரியத்திற்காக முயற்சிகள் எதனையும் எடுக்காமல் இருக்கக்கூடாது. நாம் செய்ய வேண்டிய முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான தடைகள் வருகிறது என்றால் அதனை தடுத்து நாம் நினைத்த காரியத்தை நிச்சயம் நமது குலதெய்வம் நிறைவேற்றும். நினைத்த காரியம் நிறைவேறியவுடன் மஞ்சள் துணியில் கட்டி வைத்த தொகையை குலதெய்வ கோவிலின் உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.

- Advertisement -