இவ்வளவு சுவையாக இட்லி பொடி அரைத்தால், வீட்டிலேயே இட்லி பொடி பிசினஸ் ஸ்டார்ட் செஞ்சிரலாம். ஹோட்டல் ஸ்டெயிலில் இட்லி பொடி அரைப்பது எப்படி?

idli-podi
- Advertisement -

பெரும்பாலான பெண்கள் இட்லி மாவு அரைத்து, வீட்டில் இருந்தே விற்று காசு சம்பாதிக்கிறார்கள். இட்லி பொடியை சுவையாக அரைக்க தெரிந்து கொண்டால் கூட, அந்த இட்லி பொடியை அரைத்து விற்று சின்னதா வீட்டிலேயே பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்கலாம். இந்த மாதிரி இட்லி பொடி அரைத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். இந்த இட்லி பொடியை எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு இட்லி பொடி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இப்படி இட்லி பொடி அரைத்தால், நிச்சயமா இந்த இட்லி பொடியை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கும் வரும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.

podi-idli1

இட்லி பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
உளுந்து – 1 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், எள்ளு – 1/4 கப், வரமிளகாய் – 10, கருவேப்பிலை – 1 கொத்து, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன். ஏதாவது ஒரு சிறிய டம்ளரை எடுத்து அதிலேயே எல்லா பொருட்களையும் அளந்து கொள்ளுங்கள். முதலில் கொஞ்சமாக ஒரு சின்ன டம்ளரில் எல்லா பொருளையும் அளந்து இந்த இட்லி பொடியை அரைத்து சுவைத்து பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு பக்குவம் தெரியும். முதல் முறை அரைக்கும் போது ஏதாவது தவறு செய்து விட்டால் கூட, அடுத்த முறை அதை திருத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இட்லி பொடி செய்முறை:
ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எடுத்து வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் ஒவ்வொரு பொருளாக கடாயில் போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். தனித்தனியாகவே ஒவ்வொரு பொருளாக போட்டு வறுக்கலாம். எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது. (ஒவ்வொரு பொருளாக வறுத்து எடுத்து தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.)

idli-podi3

எல்லா பொருட்களையும் எண்ணெய் ஊற்றாமல் தான் வறுக்க வேண்டும். உளுந்து கடலைப்பருப்பு இரண்டும், ஒரே மாதிரி, எல்லா பருப்பும் ஒரே நிறத்தில் வரும்படி கைவிடாமல் வருக்க வேண்டும். உளுந்தும் கடலை பருப்பும் பொன்னிறமாக வறுபட வேண்டும். அடுத்தபடியாக எள்ளு போட்டு வறுக்க வேண்டும். எள்ளு படபடவென பொறிந்ததும், தட்டில் கொட்டி விடுங்கள். வரமிளகாயையும் சேர்த்து வறுக்க வேண்டும். வரமிளகாயில் காஷ்மீரி சில்லி சேர்த்து அரைக்கும் போது உங்களுடைய இட்லி பொடி நல்ல சிவப்பு நிறத்திற்கு வரும். வீட்டில் இருக்கும் வரமிளகாயை வைத்து அரைத்தால் நிறம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். வர மிளகாயை கடாயில் போட்டு சூடு செய்து எடுத்தால் போதும்.

- Advertisement -

காய வைத்த கருவாப்பிலையாக இருந்தால், அதை கடாயில் போட்டு லேசாக சூடு செய்தால் போதும். பச்சை கருவேப்பிலையாக இருந்தால் தண்ணீரில் கழுவி, தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு, கடாயில் போட்டு அது மொறுமொறுப்பாகும் வரை வறுக்க வேண்டும். கருவேப்பிலையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் பொடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

idli-podi2

இறுதியாக சீரகம் மிளகு சேர்த்து அதை கருகாமல் வறுத்து எல்லா பொருட்களையும் ஒன்றாக கொட்டி நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க. இறுதியாக இந்த பொடிக்குத் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, அரைத்த இட்லி பொடியில் இருக்கும் லேசான சூட்டினை ஆற வைத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்த வைத்தால் 6 மாதத்திற்கு மேல் கூட இந்த இட்லி பொடி கெட்டுப் போகாது. தேவைப்படும்போது இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் விட்டு, கலந்து இதைத் தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையான சுவை இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஹோட்டலில் சாம்பார் சுவையாக இருக்க இந்த பொருள் தான் சேர்த்து செய்றாங்கன்னு சொன்னா யாரும் நம்பவே மாட்டீங்க! வாங்க அதை எப்படி செய்றாங்கன்னு பார்க்கலாம். ஹோட்டல் சுவையில் இட்லி சாம்பார் செய்வது எப்படி?

இந்த இட்லி பொடியில் நாம் பூண்டு சேர்க்கவில்லை. பூண்டு சேர்த்தால் பொடி சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் 7 லிருந்து 10 பல் பூண்டை நன்றாக நசுக்கி விட்டு 1/2 ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறம் வரும் வரை மொறுமொறுப்பாக வறுத்து, ஆற வைத்து இந்த பொடியோடு போட்டு அரைத்துக் கொள்ளலாம். அதனுடைய சுவையும் மிக அருமையாக தான் இருக்கும். இந்த இட்லி பொடி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -