மார்வாடிகள் வீட்டில் பணம் கொட்டுவதற்கு காரணம் இந்த ரகசிய தீபம் தான். இந்த தீபத்தை ஏற்றினால் நம்முடைய வீட்டிலும் செல்வ செழிப்பு கொழிக்கும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

வாழ்வில் சகலவிதமான நற்பலன்களையும் பெற்று, மன மகிழ்ச்சியோடு வாழ்பவரை தான் சகல ஐஸ்வர்யத்தோடு வாழ்கிறார் என்று கூறுவதுண்டு. அப்படி நாமும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வெற்றி மேல் வெற்றி அடைய பல விதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் தாம்பாள தீப வழிபாடு. இந்த வழிபாட்டை எப்படி முறையாக செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள்.

ஐஸ்வர்யம் பெருக தாம்பாளத்தில் தீபம் ஏற்றும் முறை:
வடமாநிலங்களில் தாம்பாளத்தில் தீபத்தை ஏற்றி வழிபடும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தாம்பாள தீப வழிபாட்டிற்கு முதலில் நாம் தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாளம் செம்பு, பித்தளை, வெள்ளி அல்லது தங்கம் என்று நம் வசதிக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். எவர்சில்வரை மட்டும் உபயோகப்படுத்தக் கூடாது.

- Advertisement -

இப்பொழுது இந்த தாம்பாளத்தில் தீபம் ஏற்றுவதற்கு நமக்கு பஞ்சு திரி தேவைப்படும். இந்த திரியை நாம் நட்சத்திர திரி என்றும் கூறுவோம். அதாவது இந்த திரிக்கு நாம் தனியாக எண்ணெய் எதுவும் ஊற்றப் போவது இல்லை. திரியை எடுத்து நெய்யில் ஊற வைத்து விட வேண்டும். திரி எந்த அளவுக்கு நெய்யை உறிஞ்சுகிறதோ அந்த அளவுக்கு மட்டும்தான் தீபம் எரியும். ஆதலால் தான் இதை நட்சத்திர திரி என்று கூறுவர்.

நம் வசதிக்கு ஏற்ப 1, 9 அல்லது 27 திரிகளை நெய்யில் நன்றாக ஊற விட வேண்டும். பிறகு இந்த திரிகளுடன் தாமரை திரியையோ அல்லது தாமரை நூலையோ சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்த பிறகு தாம்பாளத்தில் அந்த திரிகளை வைக்க வேண்டும். இந்த தீபமானது நாம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஏற்ற வேண்டும். அதுக்கேற்றவாறு திரிகளை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தீபம் ஏற்ற வேண்டிய திரியின் முனை தாம்பாளத்தின் வெளியில் இருக்க வேண்டும். மற்றொரு முனை தாம்பாளத்தின் உள் இருக்க மாறு வைக்க வேண்டும். தாம்பாளத்தின் உள் இருக்கும் முனையில், மகாலட்சுமியை மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதாவது, எத்தனை திரி உள்ளதோ அத்தனை திரிக்கும் மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.

பிறகு ஒவ்வொரு திரியில் உள்ள மஞ்சள் குங்கும்சத்திற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது “ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே நமஹ”, “ஓம் சௌபாக்கிய லட்சுமியே நமஹ” என்று கூறியவாறு நாணயங்களை வைக்க வேண்டும். பிறகு தனியாக ஒரு தீபத்தை ஏற்றி, அந்த தீபத்தின் மூலமாக இந்த திரிகளை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

ஏற்றிய பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் கூறி, மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு அல்லது சிலைக்கு பூக்களால் அர்ச்சனை செய்யலாம். பிறகு அந்த தாம்பாளத்தை எடுத்து மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விநாயகருக்கு இந்த விளக்கு ஏற்றி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் அடித்து பிடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

இந்த தீபத்தை நாம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. மேலும் பௌர்ணமி தினங்களிலும் இந்த தீபத்தை நாம் ஏற்றலாம். இவ்வாறு நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெற்று, ஐஸ்வர்யங்கள் அனைத்தும் நிறைந்து சிறப்புடன் வாழலாம்.

- Advertisement -