ரோட்டு கடைகளில் தண்ணி தக்காளி சட்னி இப்படி தான் செய்வார்களா? இதனுடைய ரகசியம் இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே சுடச்சுட இட்லிக்கு இத விட சூப்பரான சைட் டிஷ் வேற இருக்கவே முடியாது.

chutney4
- Advertisement -

சுட சுட இட்லி, பெரும்பாலும் காலை மாலை நம் வீட்டில் இருக்கும். அதிலும் நேத்து புதுசாக அரைத்த, ரொம்பவும் புளிக்காத இட்லி மாவுவில், இட்லி சுட்டால் கட்டாயம் இந்த தக்காளி சட்னி வைக்க வேண்டும். இந்த இட்லிக்கும் தக்காளி சட்னிக்கும் 10 இட்லி சாப்பிட்டால் கூட பத்தாது. அத்தனை ருசியாக இருக்கும். மழை பெய்யும் சமயத்தில் நாக்குக்கு உனக்கியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இது சூப்பரான சைடிஷ். வாங்க நேரத்தை கலக்காமல் இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை 

இதற்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கணும். அதில் மீடியம் சைஸில் இருக்கும் பழுத்த 4 தக்காளி பழங்களை வெட்டி போடணும். மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் 1, தோல் உரித்த பூண்டு பல் 7 லிருந்து 10, வர மிளகாய் 10, 1 கொத்து கருவாப்பிலை போட்டு, இதில் கொஞ்சமாக உப்பு போட்டு இதை முதலில் தண்ணீர் ஊற்றாமல் விழுது போல அரைக்கவும். தக்காளியின் நிறைய தண்ணீர் விட்டு சரியாக அரை பட்டுவிட்டால் அப்படியே விட்டுவிடுங்கள். தேவையென்றால் மிகக் குறைந்த அளவில் தண்ணீரை ஊற்றி இதை 90 சதவிகிதம் அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த அரைத்த விழுதை தாளிக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக சிவந்து வந்தவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் 2, கருவாப்பிலை 2 கொத்து, சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை தாளிப்பில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் கொஞ்சம் தாராளமாக ஊற்றுங்கள்.

இது கொஞ்சம் நீர்க்க நமக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் இது தண்ணீர் தக்காளி சட்னி அல்லவா. சரி இப்போது இந்த சட்னியில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தக்காளியின் பச்சை மனம் போக இந்த சட்னி கொதித்துக் கொண்டே இருக்கட்டும். இதற்குள் ஒரு சின்ன கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவு போட்டு, கொஞ்சமா தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொதித்துக் கொண்டிருக்கும் தக்காளியின் பச்சை மனம் நீங்கியவுடன், கலந்து வைத்திருக்கும் இந்த கடலை மாவை அந்த தக்காளி சட்னியில் ஊற்றி மூடி போட்டு மீண்டும் 5 லிருந்து 7 நிமிடங்கள் கொதிக்க வைத்தால், சூப்பரான தக்காளி சட்னி தயார். இதை காரசாரமான தண்ணி தக்காளி குழம்பு என்றும் சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே: குக்கரில் சட்னி தாளிச்சு இருக்கீங்களா? ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்தா போதும் அட்டகாசமான சட்னி தயார். சுட சுட இட்லி தோசையோடு இந்த சட்னி வச்சு சாப்பிட்டா நாளெல்லாம் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். அவ்வளவு டேஸ்டா இருக்கும்.

இந்த கடலை மாவை ஊற்றியவுடன் லேசாக இந்த சட்னி திக்கான குழம்பு பதம் வர தொடங்கும். அதற்காக ரொம்பவும் திக்காகி விடக்கூடாது. தண்ணீரின் அளவை நீங்கள் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக இதில் நன்றாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி சுட சுட இட்லிக்கு மேலே ஊற்றி சாப்பிட்டால் அப்பப்ப இப்பவே நாக்கில் எச்சில் ஊறுது. இந்த சுவை தரும் தக்காளி குழம்பு ரெசிபி யாரும் மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -