வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க, லட்சுமி கடாட்சம் பெருக, பெண்கள் எத்தனை பவுனில் தாலி சரடு அணிந்துகொள்ள வேண்டும்?

saradu1
- Advertisement -

திருமண பந்தத்திற்கு அச்சாரமாக, சாட்சியாக, அக்கினியின் முன்பு அந்த ஆண்டவனை முன்னிறுத்தி கட்டப்படும் புனிதமான தாலி சரடை பற்றித் தான், இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தாலி என்றாலே அதை மஞ்சள் கயிற்றில் கட்டுவது தான் வழக்கம். காலப்போக்கில் அதை நாம் தங்க சரடில் மாற்றி போடும் வழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம். தங்கத்திலேயே தாலி சரடு இருந்தாலும், மஞ்சள் சரடில் குண்டுகளை கோர்த்து முடிந்து கொள்வதுதான் இல்லற வாழ்க்கைக்கு நன்மையை கொடுக்கும்.

தங்க சரடில் உருக்களை கோர்த்து வைத்திருக்கும் மஞ்சள் கயிறில், தினம்தோறும் மஞ்சளை பூசிக் கொள்ள வேண்டும். நீங்கள் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் தாலிக்கொடி, சரியாக பெண்களின் மார்பு குழியில் படும்படி கட்டிக்கொள்ள வேண்டும். மஞ்சளும் தங்கமும் மார்பு குழியை உரசிக் கொண்டிருந்தால், பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மார்பகத்தில் வரக்கூடிய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கும் அளவிற்கு இந்த மஞ்சலுக்கு சக்தி உண்டு என்று சொன்னாலும் அது மிகையாகாது. சிலபேர், இந்த மஞ்சள் சரடுக்கு பதிலாக, வெள்ளி சரடில் உருக்களை கோர்த்து  வைத்திருப்பார்கள். இருப்பினும் பரவாயில்லை. அந்த வெள்ளி சரடில் தினம்தோறும் கொஞ்சம் மஞ்சள் தேய்த்து குளிக்கலாம்.

- Advertisement -

தாலி சரடை தங்கத்தில் போடுவது என்பது அவரவருடைய விருப்பம். உங்களால் எத்தனை பவுனில் போட முடியுமோ, உங்களுக்கு எவ்வளவு வசதி உள்ளதோ அத்தனை பவுனில் தாலியை அணிந்து கொள்ளலாம். ஆனால் அது ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். இரண்டு பவுனில் தாலி சரடை வாங்குகிறீர்கள் என்றால், அது இரட்டைப்படை. 2 பவுனுடன் சேர்த்து, ஒரு குண்டுமணி தங்கத்தையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல் மூன்று பவுனில் தாலிக்கொடியை அணிந்து கொள்ளலாம். 5, 7, 9 இப்படியாக உங்களது வசதிக்கு தகுந்தவாறு பவுனை அதிகரித்துக்கொண்டே செல்லலாம். இரட்டைப் படையில் 2, 4, 6 என்ற கணக்கில் தாலி சரடு வாங்குவதாக இருந்தால் மட்டும், ஒரு குண்டுமணி அளவு அதிகமாக வைத்து செய்து போட்டுக் கொள்வது நமக்கு நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

பொதுவாகவே இரட்டைப்படையை சுலபமாக பிரித்து விட முடியும். ஒற்றைப்படை பிரிப்பது என்பது கஷ்டம். இதனாலோ என்னவோ தெரியவில்லை! மொய் காசிலிருந்து, நல்ல விசேஷங்களுக்கு பொருள் வாங்குவதிலிருந்து, இப்படி நிறைய சகுனங்களில் ஒற்றை படைக்கும், ஒரு ரூபாய் நாணயத்திற்கும் அதிகப்படியான முக்கியத்துவம் தரப்படுகின்றது.

saradu2

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால், தாலி சரடின் பவுனை இரட்டைப் படையில் வாங்காமல், ஒற்றைப்படையில் இருக்கும்படி போட்டுக்கொள்வது  சிறப்பு. எந்த வீட்டில் பெண்கள் மன நிம்மதியோடு இருக்கிறார்களோ, எந்த வீட்டில் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்து, அவர்களை மகாலட்சுமியின் ஸ்வரூபமாக வழி நடத்துகிறார்களோ, அந்த வீட்டிலிருக்கும் பெண்கள் தங்களுடைய தாலி சரடில், ஒரு குண்டுமணி தங்கத்தை போட்டு இருந்தாலும் சரி, அந்த வீடு நிச்சயம் சுபிட்சம் அடையும். அந்த வீட்டில் மகாலட்சுமி தங்குவாள்.

- Advertisement -

saradu3

பதினோரு பவுனில் தாலியை அணிந்து கொண்ட பெண்ணுக்கு, வீட்டில் மன நிம்மதி இல்லை. சந்தோசம் இல்லை. அன்பு இல்லை. மதிப்பு இல்லை மரியாதை இல்லை எனும் பட்சத்தில், அந்த வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க மாட்டாள் என்பதும் உண்மை.

Thali chain

எந்த வீட்டில் மனைவிமார்கள், தங்களுடைய கணவனை மதித்து, கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து, புரிந்து விட்டுக்கொடுத்து, சரியான முறையில் வழி நடத்துகிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிச்சயமாக தங்குவாள். மனைவிமார்களால், கணவருக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றாலும், அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்காது.

wedding

கணவன் மனைவியின் ஒற்றுமைகாக குடும்பத்தின் நல்லதுக்காக எத்தனையோ சாஸ்திர சம்பிரதாய முறைகளை பின்பற்றுகின்றோம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட கணவன் மனைவியை புரிந்து கொண்டு, மனைவி கணவனை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து சென்றாலே போதும். இல்லறம் இனிமையாக அமையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை போகி அன்று, இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீர்கள். குலதெய்வ குற்றமாகிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -