காரசாரமான ‘வேர்கடலை தக்காளி சட்னி’ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க இனி அடிக்கடி செய்ய ஆரம்பிப்பீர்கள்!

verkadalai-chutney
- Advertisement -

தினமும் ஒரே வகையான சட்னி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு இந்த சட்னி வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். வேர்க்கடலையுடன் தக்காளி சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி இட்லி, தோசை மட்டுமல்லாமல் பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றுக்கு கூட அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். காரசாரமான இந்த சுவை மிகுந்த வேர்கடலை சட்னியை இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இனி அடிக்கடி இதே போல செய்ய தோன்றிவிடும். இந்த சுவை மிகுந்த வேர்க்கடலை தக்காளி சட்னி எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

verkadalai

வேர்க்கடலை தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – கால் கப், பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 5, வர மிளகாய் – 2, புளி – சிறு நெல்லிக்காய் அளவிற்கு, உப்பு – தேவையான அளவு, பூண்டு – 2 பல், உடைத்த கடலை – 2 டேபிள் ஸ்பூன். கடுகு – கால் டீஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

வேர்க்கடலை தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். அதில் வேர்கடலைகளை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். வேர்கடலை தோலுடன் இருந்தாலும் பரவாயில்லை பிறகு நீக்கி கொள்ளலாம். வேர்க்கடலை நன்கு வறுபட்டதும் அதனை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அவை நன்கு ஆறியதும் தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

verkadalai

பின்னர் அதே பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய்களை கிள்ளி உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். புளி சிறு நெல்லிக்காய் அளவிற்கு கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள். தோல் உரித்த பூண்டு பல் 2 சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பை கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு நிமிடம் நன்கு வதக்கியதும் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு உடைத்த கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நைஸாக அரைக்க முடியுமோ அவ்வளவு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தாளிக்க அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை ஒரு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இதனை சட்னியுடன் சேர்த்து கலந்து வைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த சட்னி வித்தியாசமான சுவையில் இருக்கும். இட்லி, தோசை, வடை, போண்டா போன்றவற்றுடன் சாப்பிட அவ்வளவு ருசியை கொடுக்கும். நீங்களும் இதே முறையில் உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -