மீந்து போன காய்கறிகள், சைவ-அசைவ தொக்கு வகைகள் வீணாகாமல் இருக்க இத கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க!

omlet-veg-thokku
- Advertisement -

உங்கள் வீட்டில் நீங்கள் சமைக்கும் பொழுது சாதத்துடன் ஏதாவது ஒரு காய்கறி அல்லது தொக்கு வகைகளை சமைப்பது உண்டு. அது சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும் அதிகம் மீண்டு போய்விட்டால் என்ன செய்வதென்று யோசிப்பீர்கள்! மதியம் சமைத்த இந்த பொருட்கள் மீதமாக கொஞ்சமாக இருக்கும் பொழுது இரவு நீங்கள் புதிதாக ஏதாவது சமைக்க வேண்டியிருக்கும். அது போன்ற சமயங்களில் நீங்கள் இந்த விஷயத்தை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் ரொம்ப உபயோகமாக இருக்கும். அது என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காய்கறி பொரியல் அல்லது அவியல் மதியம் சமைக்கிறீர்கள் என்றால் அது கொஞ்சமாக மீந்து போய் விட்டால் என்ன செய்வீர்கள்? இதற்கு ரொம்பவே எளிமையாக இதை செய்து பாருங்கள். இரவு நேரத்தில் நீங்கள் புதிதாக எதையும் தொட்டுக் கொள்ள செய்ய வேண்டாம். இதற்காக 2 முட்டையை எடுத்து கொள்ளுங்கள். 2 முட்டையில் நான்கு பேர் சாப்பிடும் அளவிற்கு ஒரு சூப்பரான ஆம்லெட் போடப் போகிறோம். ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதனுடன் ஒரு பச்சை மிளகாயைப் பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கொஞ்சம் மல்லி தழையை பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த மூன்று பொருட்களை எவ்வளவு பொடிதாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடிதாக நறுக்கி சேர்த்து கொண்ட பின்பு நீங்கள் எடுத்து வைத்துள்ள 2 முட்டைகளை உடைத்து ஊற்றுங்கள். நன்கு கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

இதனுடன் மீந்து போன காய்கறி பொரியல் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். ஏற்கனவே பொரியலில் நீங்கள் உப்பு சேர்த்து இருப்பீர்கள், எனவே கால் உப்பு அளவிற்கு கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பின் அடுப்பை பற்ற வைத்ததும் ஒரு ஃப்ரை பான் வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுற்றிலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பிறகு இந்த கலவையை நீங்கள் மொத்தமாக அப்படியே ஊற்றினாலும் சரி அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட் போல ரெண்டு புறமும் நன்கு பொன்னிறமாக அவிய எடுத்தாலும் சரி.

- Advertisement -

ரொம்பவே சூப்பராக காய்கறி ஆம்லெட் தயார் ஆகிவிடும். மொத்தமாக ஊற்றும் பொழுது அதனை திருப்பி போடுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும் எனவே இது போன்ற ஆம்லெட் செய்பவர்கள் ஒருபுறம் நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி போடுவதற்கு ஃப்ரை பான் மூடும் அளவிற்கு ஒரு மூடியை எடுத்து கொள்ளுங்கள். அதில் அப்படியே ஆம்லெட்டை எடுத்து பின்னர் (pan)பேனை கவிழ்த்து மூடினால் கொஞ்சம் கூட ஆம்லெட் உடையாமல் பானில் சேர்ந்து கொள்ளும். பிறகு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதை எடுத்து நான்காக வெட்டி பரிமாற வேண்டியது தான்.

ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் நான்கு பொருட்களை வைத்தே மீதமிருக்கும் காய்கறியை புதிதாக காய்கறி ஆம்லெட்டாக ஆக மாற்றி விடலாம். இனி கொஞ்சம் கூட காய்கறி பொறியியல் அல்லது தொக்கு வகைகள் நாம் வீணாக்க வேண்டிய அவசியமில்லை. காய்கறியை விட சிக்கன், மட்டன், இறால் போன்ற தொக்கு வகைகள் மீதமாகும் பொழுது இப்படி செய்து பாருங்கள், ரொம்பவே வித்தியாசமான ஒரு ஆம்லெட் செய்து சுவைக்கலாம்.

- Advertisement -