அனாதையான என் கவிதைகள் – காதல் கவிதை

Love kavithai

அவளுக்காக எழுதப்பட்ட
கவிதைகள் அனைத்தும்
இன்று அழுதுகொண்டே அனாதையாய்
காற்றில் பறக்கிறது..
அவளோ இன்று வேறொருவனோடு
மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள்.

Kadhal Kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை

ஒரு ஆண் தன் காதலியை நினைத்து எழுதும் கவிதைகளில் மிகைப்படுத்த கூடிய பல சொற்கள் இருக்கும். அதை படிப்பவர்களுக்கு அது மிகையாக தெரியலாம். ஆனால் அதை எழுதிய அவனுக்கு மட்டும் தான் தெரியும் அதில் உள்ள உண்மைகள் அனைத்தும். அதில் உள்ள ஒரு சொல் கூட அவனுக்கு மிகையாக தெரியாது. மாறாக அவை அனைத்தும் அவள் அழகை காட்டிலும் மிக குறைவாக தெரியும்.

இது போன்ற ஆயிரம் ஆயிரம் கவிதைகளை அவன் காதலிக்கும் காலத்தில் தன் காதலியை நினைத்து உருகி உருகி எழுதி அவள் முன் படித்து ஆனந்தம் கொள்வான். அந்த ஆனந்தத்தை அடைய அவன் செலவிடும் மணித்துளிகள் ஏறலாம். ஏன் என்றால் ஒரு கவிஞ்சனுக்கு தான் தெரியும் ஒரு அழகிய கவிதையை எழுத எத்தனை மணித்துளிகள் செலவாகும் என்றும். அத்தனை மணித்துளிகளையும் அவன் தன் காதலியின் மகிழ்ச்சிக்காக மட்டுமே செலவிடுவான். ஆனால் ஏதோ சில காரங்களால் அவர்களின் காதல் பிரிகையில் அந்த கவிதை வரிகளும் கூட கண்ணீர் வடிக்கும்.

Love Kavithai Image
Love Kavithai

தோழி கவிதை, நட்பு கவிதைகள், காதல் கவிதைகள் என அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் படிக்க ஒரு சிறந்த பக்கம் இது.