பேச்சுலர்ஸ் பருப்பு சாம்பார் செய்முறை

sambar
- Advertisement -

பொதுவாகவே பேச்சுலர் ஆக இருந்தாலும் சரி, இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, பருப்பை வேகவைத்து பிறகு சாம்பார் வைப்பதில் சிரமம் இருக்கும். பருப்பும் வேக வைக்கக் கூடாது. ஆனால் பருப்பு சேர்த்த சாம்பார் ருசியாகவும் கிடைக்க வேண்டும். சுலபமாக சாம்பார் வைக்க என்ன செய்வது.

இதற்காக ஒரு புதிய ஐடியாவோடு இந்த சமையல் குறிப்பு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த குறிப்பை படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது இப்படி ஒரு சாம்பார் வச்சு பாருங்க சூப்பரா சுவையாக இருக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 பல்

கருவேப்பிலை – 1 கொத்து
நறுக்கிய காய்கறிகள் – சிறிதளவு
நறுக்கிய தக்காளி பழம் – 1
உப்பு – தேவையான அளவு

- Advertisement -

சாம்பார் தூள் – 2 ஸ்பூன், அல்லது மிளகாய் தூள் 1 ஸ்பூன், தனியா தூள் 1 ஸ்பூன்.
புளிக்கரைசல் – தேவையான அளவு

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலைப்பருப்பையும் துவரையும் பருப்பையும் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடி நான்கிலிருந்து ஐந்து முறை சாம்பார் வைக்க பயன்படுத்தலாம். அப்படியே ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வச்சுக்கோங்க.

- Advertisement -

அடுத்து கேரட், கத்திரிக்காய், முருங்கைக்காய், உங்களுக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளி கரைசலையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கங்கள். பிறகு கருவேப்பிலை, நறுக்கி வைத்த காய்கறிகளை போட்டு, காய்கறிக்குத் தேவையான உப்பு போட்டு, மூன்றில் இருந்து நான்கு நிமிடம் மிதமான தீயில் வதைக்கி, பிறகு நறுக்கிய தக்காளி பழங்களை போடவும்.

தக்காளிப் பழம் லேசாக வதங்கி வந்தவுடன், சாம்பார் தூள் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் அளவு இதில் போட்டு ஒரு முறை எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு 3 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றலாம். இந்த சாம்பார் கொதிக்க கொதிக்க நன்றாக திக்காகும். தாராளமாக பயப்படாமல் தண்ணீர் ஊற்றர்கள்.

அடுத்தது கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலில் இருந்து, தேவையான அளவு புளித்தண்ணீரை இதில் ஊற்றி கலந்து உப்பு சரி பார்த்துக்கோங்க. உப்பு தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம். பிறகு ஒரு தட்டு போட்டு, மூடி இந்த சாம்பாரை மூன்றிலிருந்து நான்கு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இதையும் படிக்கலாமே: அட்டகாசமான மாம்பழ பாயாசம்

இதற்குள் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, வர மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை, தாளித்து அந்த தாளிப்பை அப்படியே சாம்பாரில் கொட்டி சுட சுட இட்லி தோசைக்கு பரிமாறினால் வேற லெவல் டேஸ்ட். பருப்பு வேக வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. சட்டுனு சாம்பார் தயார். உங்களுக்கு இந்த சாம்பார் ரெசிபி பிடிச்சிருந்தா மறக்காம நாளைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -