நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை

Love kavithai

புண் பட்ட இதயத்தில்
இன்னொரு பூ தான் மலருமா ?
வாடிக்கிடக்கும் மனதினில்
இன்னொரு வாசனை வீசுமா ?

தேய்ந்து போன பாதையில்
இன்னொரு தேர் தான் ஓடுமா ?
ஈரமற்ற மனதிலே இன்னொரு
விதை தான் முளைக்குமா ?

மீளமுடியாத சோகமும்
சொல்லமுடியாத தாகமும்
என்னுள் தவித்திருக்க
வெற்று பிணமாக வீதியில்
உலா வந்துகொண்டிருக்கிறேன் நான்..

Kadhal Kavithaigal sms
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
நீயும் உணர்வாய் ஒரு நாள் – காதல் கவிதை

பிரிந்த பல காதலர்கள், தன் காதலனையோ காதலியையோ நினைத்துக்கொண்டு பல காலம் வாழ்கின்றனர். அவர்களின் மனதில் வேறொரு காதல் பூ மலருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அப்படி மலருவதே அவர்களுக்கும் சரி அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் சரி ஒரு வசந்த காலத்தை உண்டாக்கும். ஆகையால் பட்டு போன மரத்தை நம்பி இருக்காமல் இன்னொரு காதல் பூந்தோட்டத்தை உருவாக்குவதில் எந்த தவறும் இல்லை.

Love Kavithaigal sms
Love Kavithai

நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.