இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத, ஸ்பெஷலான மசாலா பொடி சேர்த்த டிபன் சாம்பார் செய்வது எப்படி? சாம்பார் வைக்க தெரியாதவங்க இந்த சாம்பார் வைத்தாலும் வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்னா பாத்துக்கோங்க!

idli-tomato-sambar
- Advertisement -

பருப்பு இல்லாமல் விதவிதமாக சாம்பார் வைக்கலாம். சிலர் பொட்டுக்கடலை மாவு சேர்த்து சாம்பார் வைப்பார்கள். சிலர் கடலை மாவு சேர்த்து சாம்பார் வைப்பார்கள். நீங்கள் எந்த மாவு சேர்த்து வைத்தாலும் சரி, ஒரே ஒரு ஸ்பூன் இந்த ஸ்பெஷலான மசாலா பொடியை போட்டு சாம்பார் வைத்து பாருங்கள். இதனுடைய வாசமும் சுவையும் அத்தனை அருமையாக இருக்கும். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள சூப்பரான டிபன் சாம்பார் எப்படி வைப்பது நேரத்தைக் கடத்தாமல் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சீரகம் – 1 ஸ்பூன், வெந்தயம் கால் – 1/4 ஸ்பூன், வரமல்லி – 2 ஸ்பூன், பூண்டு – 5 பல், வரமிளகாய் – 3, இந்த எல்லாப் பொருட்களையும் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களெல்லாம் நன்றாக ஆறிய பின்பு இதை ஒரு மிக்ஸி ஜாரில் ‌போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 90 சதவிகிதம் இந்த பொடி அரைபட்டால் போதும். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ள வேண்டும். நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி பழங்கள் – 2, பூண்டு பல் – 4, சாம்பார் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் போட்டு, 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வைக்க வேண்டும். விசில் அடங்கியவுடன் இந்த விருது ஆறிய பின்பு இதையும் அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக 1 கப் அளவு தண்ணீரில் 2 ஸ்பூன் கடலை மாவை போட்டு கட்டிகளில்லாமல் கரைத்து இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது – 5 பல், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதை கடாயில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சாம்பாரை மூன்று நிமிடங்கள் போல கொதிக்க வையுங்கள்.

அதன்பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியில் இருந்து 2 ஸ்பூன் அளவு மசாலாவை இந்த சாம்பாரோடு சேர்த்து கலந்துவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு, அதன் பின்பு கரைத்து வைத்திருக்கும் கடலைமாவை சாம்பாரில் ஊற்றி, கலந்து தளதளவென கொதி வந்ததும் அடுப்பை மீடியமாக வீடியோ ஃபிலிமில் வைத்து ஒரு மூடி போட்டு சாம்பார் 8 லிருந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த சாம்பார் கொதிக்கும் போதே அடுத்த வீட்டு வரைக்கும் வீசும். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைத்து, இட்லிக்கு மேல சுட சுட இந்த சாம்பாரை ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே சுவை தெரியும்.

- Advertisement -