பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவியை, நீங்க இப்படி செய்து சாப்டு இருக்க வாய்பே இல்லை. இனி பிரியாணிக்கு மட்டும் இல்ல சாதம்,டிபனுக்கு என அனைத்திற்கும் இது தான் பெஸ்ட் சைட் டிஷ்

- Advertisement -

ஹோட்டல்களில் பிரியாணிக்கு சைடு டிஷ் ஆக கொடுக்கப்படும் இந்த கத்திரிக்காய் கிரேவி பிரியாணிக்கு ஒரு நல்ல காம்பினேஷன். பலரும் பிரியாணிகளை கூட வீட்டில் செய்து சாப்பிட பழகி விட்டார்கள். ஆனால் இந்த கத்திரிக்காவை மட்டும் ஏனோ பெரும்பாலும் செய்வதில்லை. இது சிலருக்கு பிடிக்காது என்பது தனிப்பட்ட விஷயம் ஆனாலும் செய்வதில்லை என்பதும் உண்மை தான். ஏன் என்றால் அது அத்தனை சுலபமாக அந்த சுவையில் நமக்கு வீட்டில் செய்ய வராது . ஹோட்டல்களில் கொடுக்கும் இந்த கத்திரிக்காய் கிரேவி வீட்டில் சுலபமாக செய்வது என்பதை பற்றிய பதிவு தான் இது.

தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 300 கிராம், வெங்காயம் -1, தக்காளி – 3, பூண்டு – 5 பல், காய்ந்த மிளகாய் – 5, சீரகம் – 1 ஸ்பூன், சர்க்கரை -1/2 ஸ்பூன், தனியா தூள் – ஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி இலை – சிறிதளவு.

- Advertisement -

முதலில் கத்தரிக்காய் இரண்டு பாதியாக நறுக்கி ஒரு ஸ்டிமர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் கூடவே காய்ந்த மிளகாய் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து மூன்று தக்காளி, வேக வைத்த காய்ந்த மிளகாய் ,சர்க்கரை, மூன்றையும் சேர்த்து பைன் பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு பொரிந்தவுடன் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதில் சேர்த்த பிறகு, பூண்டு நசுக்கி அதையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி, காய்ந்த மிளகாய் விழுதை இதில் சேர்த்து ஒரு மூன்று நிமிடம் கொதித்த பிறகு மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து அனைத்தையும் ஒரு முறை நன்றாக கலந்து விட்ட பிறகு கொதிக்க விட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து எண்ணெய் தனியாக பிரிந்து வந்திருக்கும்.

- Advertisement -

இப்போது வேக வைத்த கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி அப்படியே சேர்த்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்ட பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கழித்து இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மழைக்கு சுட சுட சாதம் வெச்சு இந்த பூண்டு தொக்கு போட்டு சாப்பிட்டு பாருங்க, டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த தொக்கு ஒரு மாதம் ஆனாலும் கெடாது.

உங்களிடம் பிரஷ் கிரீம் இருந்தால் இறக்கும் போது அதையும் சேர்த்து கொள்ளுங்கள் இந்த கிரேவி இன்னும் அருமையாக இருக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை கொத்தமல்லி தழை தூவி மட்டும் இறக்கி பரிமாறலாம். அருமையான கத்திரிக்காய் கிரேவி ரெடி. இனி இதனுடன் பிரியாணிக்கு மட்டும் அல்ல, சாதம் டிபன் என அனைத்திற்கும் இதை செய்து அசத்துங்க.

- Advertisement -