கவிதையாகும் கண்ணீர் – காதல் கவிதை

Love kavithai

உன்னை நினைத்து
கவிதை எழுத நினைக்கையில்
என் கைகளை முந்திக்கொண்டு
கண்கள் கவிபாடுகிறது
கண்ணீராய்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
நீ இன்றி ஏதும் இல்லா நான் – காதல் கவிதை

காதலிப்பவர்கள் கவிதை எழுதுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஒருவர் கவிதை எழுதுவது தான் ஆச்சர்யம். அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களிலும் தன் காதலியோ காதலனோ வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். அவர்கள் எழுதும் கவிதையின் எழுத்துக்களில் அத்தனை ஆயிரம் வேதனைகள் ஒளிந்திருக்கும். ஆனால் அவர்களோ அதை புன்னகையோடு எழுதுவார்கள்.

தனிமையில் தான் ஒருவருக்கு கவிதை வரும் என்பார்கள். கவிதை மட்டும் அல்ல காதலியின் நியாபகங்களும் பலருக்கு தனிமையில் தான் வரும். தன் காதலியையோ காதலனையோ நினைக்கையில் கவிதையோடு சிறு துளி கண்ணீரும் வருவது இயல்புதான் என்று பலர் நினைத்தாலும் அதில் உள்ள வேதனையின் கொடுமை சாதாரணம் அல்ல என்பதே உண்மை.

Love Kavithai Image
Love Kavithai

மேலும் பல காதல் கவிதைகள், காதல் மெசேஜ் மற்றும் காதல் தோல்வி கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.