செய்த பாவங்கள் தீர தேங்காய் பரிகாரம்

thengai
- Advertisement -

இந்த மனித வாழ்க்கையை வாழ்வதற்காக கொஞ்சம் நஞ்சமா பாவம் செய்கின்றோம். அடுத்தவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் சரி, நான் நன்றாக வேண்டும் என்ற சுயநலம் தான் இன்று மனிதர்களுடைய மனதில் இருக்கிறது. மனிதர்களையும் குறை சொல்லிவிட முடியாது. அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அவர்களுக்கு பிரச்சனை வந்து ஒட்டிக் கொள்கிறது.

இதனாலேயே பாதி மனிதர்கள் பயந்து, நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி ஒதுங்கி போகின்றோம். ஐயோ பாவம் என்று உதவி செய்வதற்கு கூட இந்த கலியுகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. அதெல்லாம் போகட்டும். கூடுமானவரை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்காமல் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முயற்சி செய்வோம். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்வோம் என்ற இந்த கருத்தை முன் நிறுத்தி இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

செய்த பாவத்திற்கு உண்டான தண்டனை குறைய பரிகாரம்

என்னதான் நாம் பாவம் செய்யாமல் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் வேறு வழியில்லாமல் சில தவறுகளை செய்து விடுவோம். அறிந்து செய்யக்கூடிய பாவங்கள். அறியாமல் செய்யக்கூடிய பாவங்கள் என்று இருக்கிறது. நீங்கள் செய்த பாவத்திற்கு எல்லாம் இந்த முறையில் பிரபஞ்சத்திடம் மன்னிப்பு கேளுங்கள். நிச்சயம் பாவத்திற்கு கொஞ்சமாவது மன்னிப்பு கிடைக்கும். தண்டனை பாதியாக குறையும். அதற்காக அறிந்தே பாவங்களை செய்துவிட்டு இந்த முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு.

சரி அந்த பரிகாரம் என்ன என்பதை பார்த்து விடுவோம். ஒரு முழு தேங்காய் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயின் மேல் பகுதி குடுமிப் பகுதி, அதை பிரித்து எடுத்துவிட்டு, தேங்காய்க்கு மேலே கண் பகுதியில் ஒரு ஓட்டை போட்டு, அதன் உள்ளே இருக்கும் நீரை எல்லாம் வெளியேற்றி விட வேண்டும். சபரிமலைக்கு செல்பவர்கள் இருமுடி கட்ட தேங்காய்க்கு மேலே ஓட்டை போடுவார்கள் அல்லவா.

- Advertisement -

அதே போல தான் ஓட்டை போட்டு தேங்காய் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய்க்கு உள்ளே பாதி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். கொஞ்சம் நீளமான தடிமனான திரியை அந்த தேங்காய்க்கு நடுவே போட்டு ஓட்டையில் திரியை விட்டு தேங்காய்க்கு மேலே, திரி வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறையில் வழக்கம் போல விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து இந்த தேங்காயை ஒரு சொம்பின் மேல் நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். கீழே வைத்தால் தேங்காய் நிற்காது கீழே சாய்ந்து விடும் அல்லவா அதனால். இப்போது தயார் செய்து வைத்திருக்கும் இந்த தேங்காயின் மேல் இருக்கும் திரியில் நெருப்பை பற்ற வையுங்கள். தேங்காயில் தீபம் எரியும்.

- Advertisement -

இந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து நான் அறிந்தும் அறியாமலும் இந்த பூலோகத்தில் மனிதப் பிறவி எடுத்து செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து போக வேண்டும். என்னுடைய பாவங்களை கடவுள் மன்னிக்க வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இனிமேல் என் மனதிற்கு அறிந்து எந்த பாவங்களையும் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு கூடுமானவரை அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யாமல் வாழ வேண்டும்.

உங்களுக்கு அறிந்தே சில பாவங்களை செய்திருப்பீர்கள் அல்லவா அந்த பாவத்திற்கும் மன்னிப்பை கேட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை இந்த பிரார்த்தனையை வைத்துவிட்டு நீங்கள் வழக்கம் போல உங்களுடைய வேலையை செய்யலாம். தேங்காய் தீபம் எண்ணெய் தீரும் வரை எரியட்டும்.

தீபம் எறிந்து முடிந்த பிறகு இந்த தேங்காயை உடைத்து சின்ன சின்ன பத்தைகளாக எடுத்து பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்வது சிறப்பான பலனை தரும். எத்தனை ஞாயிற்றுக்கிழமை செய்யலாம். 3 ஞாயிற்றுக்கிழமை 5 ஞாயிற்றுக்கிழமை அப்படி வைத்துக்கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை போடும் முறை

சில பேர் வாழ்க்கையில் படாத கஷ்டம் படுவார்கள். அவர்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்தால், ஏதோ ஒரு பாவ கணக்கு வந்து முன்னேற்றத்தை மறைத்து நிற்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை மூன்று வாரம் செய்தாலே நல்ல மாற்றம் வாழ்க்கையில் தெரியும் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -