குடும்பத்தில் சண்டை வராமல் இருக்க இந்த ஒரு சூடத்தை மட்டும் வாரத்தில் ஒரு நாள், வீட்டில் ஏற்றினால் போதும். சண்டை போடும் கணவர் கூட சமாதான கொடியை வீசுவார்.

fight
- Advertisement -

சண்டையில்லாத குடும்பமே இல்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக சதாகாலமும், சதா நேரமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் நல்லா இருக்குமா. இன்று சண்டை வந்தது, காலையில் அடிதடி நடந்தது, வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் டமால் டமால் என்று போட்டு உடைத்து விட்டீர்கள். அந்த சண்டை மாலையிலேயே ஓய்ந்து விட வேண்டும். போட்ட சண்டைக்கு ஒரு மன்னிப்பை கேட்டு விடுங்கள். எல்லாம் சரியாகிவிடும். கோபத்தில் யார் தான் சண்டை போடுவதில்லை. அந்த கடவுளுக்கே கோவம் வரும்போது, மனிதர்களுக்கு வராதா. ஆகவே ஒரு சண்டையை காரணமாக வைத்து குடும்பத்தை பிரித்து விடாதீர்கள். குடும்ப ஒற்றுமை என்பது ரொம்ப ரொம்ப முக்கிம். நாம் நிம்மதியாக வாழ தேவையான விஷயம் குடும்பம்.

குடும்பம் ஒற்றுமையாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
இதையெல்லாம் சொன்னால் எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு புரியாது. எவ்வளவுதான் அடங்கிப் போனாலும் சண்டைக்கு மேல் சண்டை தினம் தினம் வந்து கொண்டு தான் இருக்கும். இந்த சண்டை சச்சரவிலிருந்து தப்பிக்க ஆன்மீகம் ஏதாவது ஒரு பரிகாரம் உண்டா. நிச்சயம் இருக்குங்க.

- Advertisement -

நல்லா இருந்த குடும்பத்தில் யாராவது கண் திருஷ்டி வைத்துவிட்டு சென்று இருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் நெகடிவ் எனர்ஜியே உங்கள் குடும்பத்தில் சண்டை வர காரணமாகவும் இருக்கலாம்.(அதுமட்டுமல்லாமல் சில பேருக்கு இயற்கையாகவே சட்டு சட்டுனு கோபம் வரும்). இதையெல்லாம் நெருப்பில் போட்டு பொசுக்கி விட்டால் குடும்பத்தில் சந்தோஷம் பிறந்துவிடும். சண்டை சச்சரவு வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

ஒரு சின்ன மண் அகல்விளக்கு எடுத்துக்கோங்க. அதில் பச்சை கற்பூரம் ஒரு துண்டு, இரண்டு கிராம்பு போட்டுக்கோங்க. அந்த இரண்டு பொருட்களையும் நெருப்பில் பற்ற வையுங்கள். இந்த அகல் விளக்கை அப்படியே கையில் எடுத்துச் செல்ல முடியாது சுடும். அகல் விளக்கை ஒரு தட்டின் மேல் வைத்துவிட்டு, இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். படுக்கையறை பூஜையறை சமையலறை வரவேற்பறை என்று எல்லா மூளை முடுக்குகளிலும் இந்த புகை படும் படி வீடு முழுவதும் அப்படியே காண்பித்து வரும்போது உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு அம்பாளின் பெயரை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் மாரியம்மா தாயே போற்றி, அப்படி இல்லை என்றால் ஓம் சக்தி, அல்லது பராசக்தி என்ன வேணும் என்றாலும் சொல்லலாம். இந்த சூடத்தை அப்படியே கொண்டு போய் வீட்டு வாசலுக்கு வெளியில் வைத்து விடுங்கள். (இந்த புகையை சுவாசிக்கும் போது முன்கோபம் வருபவர்களுக்கும் அந்த கோபம் குறைக்கப்படும்.) அவ்வளவுதான். உங்கள் வீட்டின் மேல் இருந்த நெகட்டிவ் எனர்ஜியை அனைத்தும் அந்த புகை சரி செய்து விடும். வீட்டிற்குள் நெருப்பைக் கொண்டு செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும். துணிமணி ஸ்க்ரீன் பெட் இவைகளில் எல்லாம் நெருப்பு படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டும் போதும்.

இதையும் படிக்கலாமே: உடல் சோர்வும், தூக்கமும் உங்களை எந்த வேலையையும் சரியாக செய்ய விடாமல் தடுக்குதா? மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த தண்ணீரில் குளித்தால் போதும். பிறகு நீங்கள் எறும்பு போல சுறுசுறுப்பா வேலை செய்ய தொடங்கிடுவீங்க.

வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு இதை செய்தால் போதுமானது. உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும். சதா சண்டை போடும் கணவன் மனைவி பிரச்சனைக்கும் ஓய்வு கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -