செய்வினை பரிகாரம்

seivinai pariharam in Tamil
- Advertisement -

நம்மை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நமக்கு எந்த வகையிலாவது பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாந்திரீக கலையை தீய வழிகள் பயன்படுத்தி செய்வது தான் செய்வினை, எனப்படுவதாகும். இப்படி செய்வினை செய்யப்பட்டு, அதனால் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து விடுபட செய்ய வேண்டிய செய்வினை பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

செய்வினை நீங்க பரிகாரம்

குலதெய்வத்தை போன்று சிறந்த தெய்வம் எதுவுமில்லை என்கிற ஒரு சொல் வழக்கு உண்டு. நாம் எந்த கோயிலுக்கு சென்று, எந்த வகையான தெய்வத்தை வழிபட்டாலும், நம் குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் அந்த தெய்வங்கள் நமக்கு நன்மைகளை செய்ய முடியாது.

- Advertisement -

எனவே தங்களுக்கு செய்வினை செய்யப்பட்டிருப்பதாக கருதும் நபர்கள் முடிந்தால், தினந்தோறும் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு மலர்களை சமர்ப்பித்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து வந்தாலே செய்வினை கோளாறுகள் நீங்கும். மேலும் தினந்தோறும் சூரிய வழிபாடு மேற்கொள்பவர்களை எத்தகைய செய்வினை மாந்திரீக ஏவல்களும் எதுவும் செய்ய முடியாது. எனவே நாள்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய உதய நேரத்தில் சூரிய பகவானை வழிபாடு செய்வதால் செய்வினை பாதிப்புகள் நீங்கும்.

பொதுவாக எந்த ஒரு செய்வினை பாதிப்பும், அந்த செய்வினை செய்யப்பட்டவரின் மன மற்றும் சிந்தனை திறனை பாதித்து, அவர்களை ஒரு குழப்ப நிலையில் ஆழ்த்தும் என கூறப்படுகின்றது.

- Advertisement -

எனவே தங்களுக்கு செய்வினை பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கருதுபவர்கள். சந்திர பகவானின் சகோதரியான ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி எனப்படும் அம்பாளின் “ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம” பாராயணம் வீட்டில் தினந்தோறும் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் வலம்புரி சங்கு வைத்து வழிபாடு செய்பவர்களை செய்வினை மாந்திரீக தாக்குதல்கள் பாதிக்காது. தினந்தோறும் வீட்டில் கோ பூஜை செய்பவர்களையும் செய்வினை தோஷங்கள் பாதிக்காது.

வீட்டின் நான்கு திசை பகுதிகளிலும் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து விடுவதால், செய்வினை ஏவல் போன்ற மாந்திரீக தாக்குதல்களால் வீட்டில் உள்ளவர்களுக்கு எத்தகைய ஆபத்துகளும் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற செய்வினை தோஷங்கள் நீங்கி, நலம் பெற விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு கோயில் குளக்கரைக்கு சென்று, கையில் ஒரு புள்ளி இல்லாத எலுமிச்சை பழத்தை வைத்துக்கொண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற செய்வினை தோஷங்கள் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு, எலுமிச்சம் பழத்தை உங்கள் தலையை வலது புறமாக மூன்று வரை சுற்றி அந்தக் குளத்தில் விட்டெறிந்து விட வேண்டும். பிறகு அந்த திருக்குளத்தில் மூழ்கி எழுந்து, புத்தாடைகளை அணிந்து கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டால் எத்தகைய தீவிரமான செய்வினை தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை நீங்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக செய்யும் சுக்கிர தோஷ பரிகாரம்

செய்வினை தோஷத்தால் தங்களுக்கு உடல் மற்றும் மனதளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கருதுபவர்கள் நரசிம்மர் சன்னதி இருக்கின்ற கோயிலுக்கு சென்று, நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து, அந்த சன்னதி அர்ச்சகரை கேட்டு, வலம்புரி சங்கில் தீர்த்தத்தை கொண்டு வர செய்து, அதை அவர் கைகளால் உங்கள் முகத்தில் அடித்து தெளித்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் உங்களைப் பீடித்து இருக்கின்ற எத்தகைய செய்வினை தோஷங்களும் உடனடியாக தீரும்.

- Advertisement -