சிறு சிறு குறிப்புகள் தான் சமையலையும், வீட்டையும் அழகாக்குகிறது! இனிய இல்லத்திற்கு முத்தான 10 குறிப்புகள்.

idli-chappathi-thokku
- Advertisement -

பொதுவாக சமைக்கும் சமையலிலும், வீட்டை பேணி காப்பதிலும் ஒரு பெண்ணுடைய கடமை ஆரம்பமாகிறது. முத்து முத்தாக இருக்கும் இந்த குறிப்புகளை இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால், ரொம்பவே உபயோகமாக இருக்கும். ஆணுக்கு நிகராக பெண்கள் வேலைக்கு செல்லும் இந்த காலகட்டத்தில் சில நுணுக்கங்கள் தெரிந்திருந்தால் பணமும், நேரமும் மிச்சமாகும். அத்தகைய இனிய இல்லத்திற்கான 10 குறிப்புகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
சமைக்கும் பொழுது பயன்படுத்தும் கரண்டி கனமாக இருப்பதை விட, லேசாக இருக்குமாறு பார்த்து வாங்கி பயன்படுத்தி பாருங்கள், வாட்டமாகவும், சுலபமாக இருக்கும். கனம் குறைவாக உள்ள கரண்டியை வாங்கி உங்கள் தேவைக்கு ஏற்ப வளைத்து வதக்குவதற்கு பயன்படுத்தினால் கச்சிதமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
முட்டையை அவிக்கும் பொழுது அவிக்க பயன்படுத்தும் பாத்திரம் அகலமாக இல்லாமல், குறுகலாக இருந்தால் அவ்வளவு எளிதாக முட்டை உடையாது. சிட்டிகை அளவு சோடா உப்பை போட்டு 10 நிமிடம் அடுப்பை மீடியமாக வைத்து எடுத்தால் சரியான பதத்தில் வேகும்.

குறிப்பு 3:
ரசம் வைக்கும் பொழுது கண்டிப்பாக புளித் தண்ணீரை ஊற்றுவதற்கு முன்னர் மற்ற பொருட்களை எல்லாம் நன்கு கொதிக்க வைத்து பச்சை வாசனை போன பின் புளித் தண்ணீரை ஊற்றினால் கசப்பில்லாத சூப் போல சூப்பரான ரசம் கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், 3 தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு மசிய வதக்கி சூடான சாதத்துடன் சாப்பிட்டால் உடனடி லஞ்சு ரெடி! தொட்டுக்க ஊறுகாயே போதும்.

குறிப்பு 5:
தலை பாரமாக இருந்தால் டீ போடும் பொழுது இஞ்சி, ஏலக்காய் உடன் நாலைந்து புதினா இலைகளையும் சேர்த்து போட்டு குடித்து பாருங்கள், பிரஷ்ஷாக உணர்வீர்கள்.

- Advertisement -

குறிப்பு 6:
இட்லி அவிக்க பயன்படுத்தும் துணியை தட்டில் போட்டு பின்பு மாவு ஊற்றுவதை விட, மாவு தட்டில் ஊற்றிய பின்பு மேலே துணியை போட்டு மூடி பாருங்கள், கொஞ்சம் கூட ஒட்டாமல் இட்லி அழகாக எடுக்க வரும். துணியை சுத்தம் செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.

குறிப்பு 7:
சைவ மற்றும் அசைவ குருமா வகைகளுக்கு தேங்காயுடன் சீரகம், சோம்பு, மிளகு தலா ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து அரைத்து ஊற்றினால் கரி சுவையை மிஞ்சும் ருசியைக் கொடுக்கும்.

குறிப்பு 8:
வீட்டில் பல்லிகள் தொந்தரவு அதிகமாக இருந்தால், அடிக்கடி பல்லி வரும் இடங்களில் மட்டும் மயில் தோகைகளை ஒட்டி வையுங்கள். அந்தப் பக்கம் ஒரு பல்லியும் பிறகு எட்டி கூடப் பார்க்காது.

குறிப்பு 9:
மோர் குழம்பு செய்யும் பொழுது மோர் திரியாமல் இருக்க, அடுப்பை குறைவாக வைத்துக் கொண்டு கொதிக்க விட வேண்டும். அரைத்த விழுதினை வதக்காமல் மோரில் கரைத்து ஊற்றினால் மோர் திரியாமல் இருக்கும்.

குறிப்பு 10:
சப்பாத்தி மாவு மிருதுவாக பஞ்சு போல இருக்க கோதுமை மாவுடன், கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து பாருங்கள். நீண்ட நேரத்திற்கு சாஃப்ட் ஆகவும், சுடுவதற்கு மிருதுவாக பஞ்சு போலவும் வரும்.

- Advertisement -