இப்படி இட்லி மாவு அரைச்சா, 12 கப் அரிசிக்கு, 1 கப் உளுந்து இருந்தா போதும் சூப்பரான மல்லிப்பூ இட்லி தயார் செய்யலாம். கேட்கவே ஆச்சரியமா இருக்கு இல்ல, வாங்க அது எப்படின்னு பாக்கலாம்.

- Advertisement -

இந்த இட்லிக்கு மாவு அரைப்பது என்பது இன்றளவும் பெரிய விஷயமாக தான் உள்ளது. அதை பக்குவமாக ஊற வைத்து பதமாக அரைத்து சுவையாக இட்லி ஊற்றி எடுப்பது ஒரு பெரிய கலை தான். அந்த காலத்தில் எல்லாம் இப்போது இருப்பதைப் போல் மாவு அரைக்க பெரிய வசதிகள் எல்லாம் ஒன்றும் கிடையாது. வீட்டிலும் ஆட்கள் அதிகம். அத்தனை கிலோ மாவையும் சாதாரணமாக அரைத்து எடுத்தார்கள். இப்போது இந்த பதிவிலும் அவர்கள் பயன்படுத்திய ஒரு சின்ன குறிப்பை பயன்படுத்தி தான் இந்த மாவை அரைத்து எடுத்து எடுக்க போகிறோம். அதை எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இட்லிக்கு மாவு அரைக்க அரிசி உளுந்து அளக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் இப்போது 12 டம்ளர் அரிசிக்கு ஒரே ஒரு டம்ளர் உளுந்தை மட்டும் சேர்த்து எப்படி அரைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு முதலில் எட்டு டம்ளர் அளவிற்கு புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதே டம்ளரில் 4 பங்கு பச்சரிசி எடுத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். உங்களிடம் எந்த அரிசி இருக்கிறதோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் ரேஷன் அரிசி இருந்தாலும் பயன் படுத்தலாம்.

அதே போல் எந்த டம்ளரில் அரிசி அளந்தீர்களோ அதே டம்ளரில் ஒரு டம்ளர் உளுந்தை நன்றாக கழுவி எடுத்து ஒரு டம்ளர் உளுந்துக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்தில் ஊற வைக்கும் தண்ணீர் மட்டும் கொஞ்சம் அதிகமாக ஊற வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அரைக்கும் போது இந்த தண்ணீரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இந்த அரிசியும் உளுந்தும் குறைந்தது 6 மணி நேரமாவது ஊற வேண்டும் அப்போது தான் இட்லி மாவு நன்றாக உபரியாகும்.

- Advertisement -

ஆறு மணி நேரம் கழித்து முதலில் உளுந்தை அரைத்துக் கொள்ளலாம். உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உளுந்து ஊற வைத்த தண்ணீரை லேசாக தெளித்து தெளித்து மாவை அரைக்க வேண்டும். ஒரு பத்து நிமிடம் வரையிலாவது நீங்கள் கிரைண்டர் பக்கத்திலேயே இருந்து இந்த தண்ணீரை நன்றாக தெளித்து மாவை அரைத்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு மாவு நல்ல சாப்டாக கிடைக்கும் ஓரங்களில் இருக்கும் உளுந்தை எல்லாம் மொத்தமாக எடுத்து விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் தண்ணீர் தெளித்து அரைத்து மாவு உபரியானவுடன் 10 நிமிடம் எதுவும் செய்யாமல் அப்படியே உளுந்து அறையட்டும் .இப்போது எதையும் சேர்க்க வேண்டாம் மொத்தமாக 20 நிமிடம் அரைப்பட்டால் போதும். ஊளுந்து பக்குவமாக அரைந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள உங்கள் கையில் கொஞ்சம் மாவு எடுத்து லேசாக ஊதிப் பாருங்கள் மாவு அப்படியே அலை போல போகும். அப்படி போனால் மாவு சரியான பதத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம் உளுந்து எடுத்து விடலாம்.

உளுந்து எடுத்த பிறகு இப்போது சுத்தம் செய்து வைத்து அரிசியை போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அரிசியை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து இரண்டு கைப்பிடி அளவிற்கு வடித்த சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் காலை வடித்த சாதம் மீதம் இருக்கும் அல்லவா அந்த சாதத்தை சேர்த்தாலே போதும் சேர்த்து தண்ணீர் தெளித்து இந்த அரிசியும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரிசி அரைக்கும் பதம் ரவையின் பதத்தை விட கொஞ்சம் நைசாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் அதற்காக அதிக பைனாக அரைக்க கூடாது இட்லி வராது.

இதையும் படிக்கலாமே: ஸ்டார் ஹோட்டல்களில் பிரியாணிகளுக்கு கொடுக்கப்படும் இந்த எம்ட்டி சால்னாவை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, இனி வீட்டில் பிரியாணி மட்டுமல்ல சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எது செஞ்சாலும் சைடிஷா இந்த சால்னா தான் கேட்பாங்க.

இப்படி அரைத்த உளுந்து அரிசி இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். கலக்கும் போது கரண்டி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கை வைத்து கலக்கினால் சீக்கிரம் புளித்து விடும். அரைத்த மாவு இரண்டு மூன்று நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டியதாக இருக்கும் எனவே கரண்டி வைத்து கலந்து கொள்ளுங்கள்.இந்த மாவில் இருந்து கொஞ்சம் மாவை தனியாக எடுத்து உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் மாவை எடுத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இந்த உப்பு சேர்த்து கலந்த மாவு எட்டு மணி நேரம் அப்படியே இருந்தால் மாவு நன்றாக புளித்து விடும் அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்ற ஆரம்பிக்கலாம் நல்ல சாப்ட்டான இட்லி உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -