சொதப்பல் இட்லி மாவை சரி செய்ய வீட்டு குறிப்பு

idlimavu
- Advertisement -

சில சமயம் இட்லிக்கு மாவு அரைக்கும் போது அதனுடைய பக்குவம் தவறிவிடும். மாவில் இட்லி வார்த்தாலும் சாஃப்ட்டாக வராது. தோசை ஊற்றினாலும் சரியாக வராது. இப்படிப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு வீட்டுக்குறிப்பு. இதோடு சேர்த்து இன்னொரு வீட்டு குறிப்பையும் பார்க்க போகின்றோம்.

இரண்டு பேருக்கு வரக்கூடிய இட்லி மாவை, ஐந்து பேர் சாப்பிடும் படி எப்படி மாற்றுவது. இதற்கும் ஒரு சூப்பரான ஐடியா இருக்கு. சமையலில் சொதப்பும்போது இப்படியெல்லாம் இக்கட்டான சூழ்நிலை வரும்போது, இல்லத்தரசிகள் சமாளிக்க இப்படிப்பட்ட வீட்டு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். பதிவை படித்து இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க. அவசரத்துக்கு கண்டிப்பா உபயோகப்படும்.

- Advertisement -

சொதப்பல் இட்லி மாவை சரி செய்ய

ஒரு சின்ன குண்டானில் மாவு எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு அல்லது ஐந்து பேர் சாப்பிடும் அளவு மாவு இருக்கு. இந்த சொதப்பலான மாவை சரி செய்ய போகின்றோம். ஒரு சின்ன பாத்திரத்தில் 5 அல்லது 6 அப்பளம், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் ரவை போட்டு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி இந்த பொருளை ஊற வைத்து விடுங்கள்.

1/2 மணி நேரம் இந்த பொருள் எல்லாம் ஊறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை, சொதப்பலான இட்லி மாவில் ஊற்றுங்கள். இதோடு ஒரே 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, மாவை நன்றாக அடித்து கலந்து பிறகு இட்லி வார்த்து பாருங்கள். இட்லி சாப்டாக சூப்பராக வரும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் இதில் தோசை வார்த்தாலும் மொறுமொறுப்பாக வரும். பேப்பர் ரோஸ்ட்டே இந்த மாவில் சுட்டு எடுக்கலாம். இந்த ஐடியா சொதப்பல் மாவுக்கும் மட்டுமல்ல .இட்லி மாவு ரொம்பவும் அடி மாவு ஆகிவிட்டால், அதில் வெறும் அரிசி மாவு மட்டும்தான் இருக்கும். அதில் இந்த மெத்தடை ட்ரை பண்ணாலும், அந்த அடி மாவில் கூட இட்லி வரும்.

2 பேர் சாப்பிடும் இட்லி மாவில், 4 பேர் சாப்பிட

ஒரு கப் அளவு மாவு இருக்குது. அந்த மாவை இப்போ டபுளாக்க போகின்றோம். எப்படி தெரியுமா. ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க. அதில் ரவை 1 கப், அரிசி மாவு 1/2 கப், வடித்த சாதம் 1 கப், இந்த மூன்று பொருட்களையும் போட்டு இதை அரைப்பதற்கு 1/4 கப் அளவு தயிர் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரைக்கவும். இந்த மாவை அரைத்தால் இட்லி மாவு பதத்தில் நமக்கு கிடைக்கும். கொஞ்சம் கெட்டியாக தான் அரைக்க வேண்டும்.

- Advertisement -

ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைச்சிடாதீங்க. இந்த மாவை நம் வீட்டில் இருக்கும் கொஞ்சம் இட்லி மாவோடு சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு போட்டுக்கோங்க. இதில் 1/4 ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா மாவு, அதாவது ஆப்ப சோடா மாவு போட்டு கரைத்து அப்படியே வைத்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து இதில் இட்லி ஊற்றினாலும் சூப்பராக வரும்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூம் பிளாஸ்டிக் ஸ்டூல் சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

தோசை ஊற்றினாலும் சூப்பராக வரும். மதியம் வடித்த சாப்பாடு எப்படியும் வீட்டில் மிச்சம் இருக்கத்தான் போகிறது. சாப்பாடு இல்லை என்றால் கொஞ்சம் அவல் சுடுதண்ணியில் போட்டு ஊற வைத்து இந்த குறிப்பை பின்பற்றலாம். உங்களுடைய வீட்டில் புளித்த இட்லி மாவு தான் இருக்கிறது எனும் பட்சத்தில் இதில் தயிர் ஊற்ற தேவை கிடையாது. வெறும் தண்ணீரை ஊற்றியே அந்த மாவை நீங்கள் அரைத்து தயார் செய்து கொள்ளுங்கள். எளிமையான வீட்டு குறிப்பு தான் தேவை என்பவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -