இல்லத்தரசிகளுக்கு தேவையான குட்டி குட்டி சமையல் குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக!

garlic-maavadu_tamil
- Advertisement -

பொதுவாக சமைக்கும் பொழுது எல்லாவற்றுக்குமே தாளிப்பது உண்டு! கூடுமானவரை தாளிப்பு இல்லாமல் சாப்பிடுவது ஆரோக்கியம் தரும் தெரியுமா? அது போல வெங்காயத்தை நீண்ட நேரம் வெட்டியபடி வைக்கக் கூடாது, காற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதில் அமர்ந்து கொள்ளும். இதை தடுக்க கொஞ்சம் வெண்ணையை தடவி வைத்தால் நல்லது. இப்படி ஏராளமான நமக்கு தெரியாத குட்டி குட்டி சமையல் குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

டிப் நம்பர் 1:
காய்ந்த மிளகாய் வெறும் வாணலியில் போட்டு வறுக்க போகிறீர்கள் என்றால் சிறிதளவு உப்பை போட்டு வறுத்தால் மிளகாயின் நெடி எடுக்காமல் இருக்கும். இதனால் இருமல் தொந்தரவு வராது.

- Advertisement -

டிப் நம்பர் 2:
கூட்டு, குழம்பு ஆகியவை நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க பொட்டுக் கடலையை அரைத்து சிறிதளவு சேர்த்து செய்யுங்கள். சிலர் அரிசி மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றுவார்கள், அதை விட இது பெஸ்ட்.

டிப் நம்பர் 3:
உடம்பில் ரத்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வரலாம் அல்லது உணவிலும் சேர்க்கலாம்.

- Advertisement -

டிப் நம்பர் 4:
மலிவான விலைக்கு பூண்டு கிடைக்குதுன்னு நிறைய வாங்கி வைத்து விட்டால் சீக்கிரமே கெட்டுப் போய்விடும். பூண்டு பற்களை தனித்தனியாக பிரித்து சிறிதளவு கேழ்வரகு தூவி வையுங்கள், அதிக நாட்கள் வரை புழுக்கள் பிடிக்காமல் இருக்கும்.

டிப் நம்பர் 5:
தேங்காய் சட்னி வெள்ளையாக இருக்க வேண்டும் என்றால் தேங்காயை நீங்கள் அரைக்கும் பொழுது அதன் பின்புறம் இருக்கும் தோலை சீவி விட்டு அரைக்க வேண்டும். அப்போது தான் ஹோட்டலில் கொடுப்பது போல வெள்ளை வெளேர் என இருக்கும். சில முந்திரிப் பருப்புகளையும் சேர்த்தால் சுவை தூக்கலாக இருக்கும்.

- Advertisement -

டிப் நம்பர் 6:
கோதுமையை வெயிலில் காய வைத்து அரைப்பதை காட்டிலும் சிறிது வாணலியில் போட்டு லேசாக வறுத்து, பின்னர் மாவாக அரைத்து வைத்து காற்று புகாத டப்பாக்களில் சேமித்தால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாது.

டிப் நம்பர் 7:
வீட்டில் மாவடு தயாரித்து வைக்கிறீர்கள் என்றால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து பாட்டிலில் அடைத்து வையுங்கள்.

டிப் நம்பர் 8:
தோசை மாவு அரைத்தால் வெள்ளையாக தோசை வருகிறதா? கொஞ்சம் துவரம் பருப்பு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவு அரைத்து பாருங்கள், முறுகலாக தோசை சிவப்பாக சுடலாம். சுவையும் சூப்பராக இருக்கும்.

டிப் நம்பர் 9:
ஆப்பம் நீண்ட நேரம் காய்ந்து போகாமல் பஞ்சு போல இருக்க, ஆப்ப மாவு தயாரிக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து அரைத்து பாருங்கள். நீண்ட நேரம் மிருதுவாக பஞ்சு போலவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இட்லி, தோசைக்கு சைடிஷ்ஷாக சுவையான இந்த கத்திரிக்காய் கடையலை ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. சட்னி சாம்பார் வைக்கும் நேரத்தை விடவே ரொம்ப சீக்கிரம் செஞ்சிடலாம்.

டிப் நம்பர் 10:
தக்காளியை தோல் நீக்கி விட்டு சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், லேசாக தக்காளியின் மேற்புறமும், கீழ்புறமும் கத்தியால் கீறி வெந்நீரில் போட்டுக் கொள்ளுங்கள். ரெண்டு நிமிடம் கழித்து எடுத்து தோலை உரித்துப் பாருங்கள், அப்படியே உறிந்து வந்து விடும்.

- Advertisement -