நினைத்தது நிறைவேற வாராகி வழிபாடு

varahi jasmine
- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்கும். அந்த வகையில் வாராகி வழிபாட்டை தேய்பிறை பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி என இரண்டு தினங்களில் செய்யலாம். இதில் கடன் அடைய, நோய் தீர இவற்றுக்குயெல்லாம் தேய்பிறை பஞ்சமி சிறந்ததாக இருக்கும். செல்வம் பெருக வாழ்வில் சுபிட்சம் கிடைக்க வளர்பிறை பஞ்சமியில் வழிப்பட்டால் மிகவும் நல்லது.

வாழ்க்கையில் நம் குறைகள் தீர தேய்பிறை பஞ்சமி வணங்க வேண்டும். வாழ்வில் வளர நினைப்பவர்கள் வளர்பிறை பஞ்சமியில் வணங்குவது சிறந்தது. அந்த வகையில் நாளை கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை வளர்பிறை பஞ்சமி திதியில் நமக்கு வேண்டியதை கிடைக்க செய்யப்படும் இந்த வழிபாடு அதிக பலனை கொடுக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அந்த வழிபாடு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க வாராகி வழிபாடு

இந்த பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை காலை 11.03 தொடக்கி சனிக்கிழமை காலை 9.18க்கு முடிகிறது. இந்த இரண்டு நாட்களிலும் இருந்தாலும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக இந்த வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாள். அது மட்டும் இன்றி இரவு எட்டில் இருந்து 9 சுக்கிர ஹோரை இந்த நேரத்தில் நாம் செல்வம் தொடர்பான எந்த வழிபாடு செய்தாலும் அது பல மடங்கு பலனை தரும்.

அத்துடன் வாராகி அன்னைக்கும் இரவு நேர வழிபாடே உகந்தது. ஆகையால் இத்தனை சிறப்பம்சங்கள் இந்த நேரத்தில் இந்த பரிகார வழிபாட்டை செய்வதே சிறந்தது. இந்த வழிபாடு செய்வதற்கு வாராகி அன்னை படம் வைத்திருப்பவர்கள் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். தீபம் மட்டும் ஏற்றி வழிபடுபவர்கள் விளக்கை சுத்தப்படுத்தி இதே போல செய்து விடுங்கள். வாராகி அன்னைக்கு பிடித்த செவ்வரளி மலரால் மாலை தொடுத்து போடுங்கள்.

- Advertisement -

அடுத்து நெய்வேத்தியமாக உங்களால் இயன்ற கிழங்கு, பழ வகைகள் அல்லது சர்க்கரைப் பொங்கலோ எதை செய்ய முடியுமோ அதை படைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு சிறிய தட்டில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதை வாராகி அம்மன் படத்திற்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஐந்து மல்லிகை மொட்டுக்களை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வேறு பூக்களை பயன்படுத்தக் கூடாது.

இந்த மல்லிகை மொட்டை கையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ அதை வாராகி அன்னையிடம் மனதார கேளுங்கள். கடன் அதிகம் உள்ளது என்றாலும் கடன் அடைய வேண்டும் என்று கேட்காமல் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று கேளுங்கள். பணம் வந்தாலே கடன் அடைந்து விடும் தானே. நாளை இந்த வழிபாட்டில் நீங்கள் வேண்ட கூடிய எந்த வேண்டுதலும், வேண்டும் என்று கேட்பபவையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வழிபாடு செய்த பிறகு மல்லிகை பூவை மஞ்சள் குங்குமம் வைத்து அந்த தட்டில் வைத்து விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தேனை எடுத்து தட்டில் நீங்கள் வைத்திருக்கும் பூக்களின் மீது ஊற்ற வேண்டும். அந்த தேனில் மல்லிகை மலர் நன்றாக ஊற வேண்டும். அந்த அளவிற்கு தேனை தாராளமாக ஊற்றுங்கள்.

அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விடுங்கள். பின்பு தட்டில் தேன் ஊற்றி ஊற வைத்த மல்லிகை மொட்டை வீட்டிற்கு வெளியில் எறும்புகள் அதிகம் மொய்க்கும் இடத்தில் வைத்து விட்டு வர வேண்டும். இதை தூக்கிப் போடக் கூடாது கைகளால் எடுத்து உணவளிப்பது போல வைத்து விட்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: சூரசம்ஹாரம் அன்று விரதம் இருக்கும் முறை.

இந்த வழிபாடு செய்பவர்களுடைய வேண்டுதல் அடுத்த வளர்பிறை பஞ்சமிக்குள் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் வாராகி அன்னை வழிபட்டு நீங்கள் நினைத்த செல்வ வளமான வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம்.

- Advertisement -