தோல்வி உங்கள் பக்கத்தில் கூட வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? விநாயகரை இப்படி வழிபாடு செஞ்சு பாருங்க!

vinayagar
- Advertisement -

தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தால், அந்த வாழ்க்கை, சுவாரசியமானதாக இருக்காது. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து தான் இருக்கவேண்டும். இருப்பினும் தொடர் தோல்வியை சந்தித்து வருபவர்களுக்கு, மனதளவில் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான் செய்யும். அந்த தோல்வியை வெற்றிப்படிகளாக மாற்றுவதற்கு விநாயகரை எந்த நாளில், எந்த முறைப்படி எப்படி, வழிபாடு செய்தால், தொடர் தோல்விகள் கூட தொடர் வெற்றிகளாக மாறும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vinayagar-chathurthi1

நம்முடைய சங்கடங்களைத் தீர்த்து, காரிய தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் சக்தி விநாயகருக்கு அதிகம் உண்டு. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இந்த விநாயகரை வாரம்தோறும் வரும் திங்கட் கிழமைகளில் நம்முடைய வீட்டிலேயே காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்யலாம். திங்கள் கிழமை அன்று அதிகாலை வேளையில் எழுந்து குளித்து முடித்து விடுங்கள். முந்தைய நாளே அருகம்புல்லைக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த அருகம் புல்லில் இருந்து கொஞ்சமாக சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அறுகம்புல் விநாயகருக்கு சாத்தி விடுங்கள். பிழிந்து எடுத்து வைத்திருக்கும் அருகம்புல் சாறோடு, இரண்டு மிளகை தூள் செய்து, போட்டுக்கொள்ளுங்கள். மொத்தமாக 2 டேபிள் ஸ்பூன் சாறு இருந்தால்கூட போதும். அதை விநாயகர் முன்பு வைத்து விட்டு, ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வாழ்க்கையில் சகல சௌபாக்கியமும் பெற்று தோல்வி இல்லாத வாழ்க்கையை அமைத்து தர வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு, ‘ஓம் கம் கணபதயே நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு, அதன் பின்பு அந்த அருகம்புல் சாறை நீங்கள் பருகிவிட வேண்டும்.

arugampul-vinayagar

வாரம்தோறும் வரும் திங்கள் கிழமைகளிலும் மாதம்தோறும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி தினத்திலும் இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து செய்து வாருங்கள். இதோடு சேர்த்து சங்கட சதுர்த்தி தினத்தில் மாதம் ஒரு முறையாவது, விநாயகரை வேண்டி ஒருவேளை விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுவது நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது.

- Advertisement -

சங்கட சதுர்த்தி அன்று ஒரு வேளை மட்டுமாவது உணவு சாப்பிடாமல் விரதம் இருந்து பாருங்கள்! நிச்சயம் உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்களை விநாயகர் தீர்த்து வைப்பார். உங்களுக்கு கஷ்டம் வந்தால் தான் சங்கட சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

Vellerukka Vinayagar

சங்கடங்கள் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் கூட, சங்கட சதுர்த்தி தினத்தில் விநாயகர் கோவிலுக்கு சென்று சங்கடங்கள் இனி வரக்கூடாது என்றும், சங்கடங்கள் இல்லாத வாழ்க்கையை தந்தமைக்கு நன்றி கூறியும், ஒரு சிதறு தேங்காய் உடைத்து வாருங்கள். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல நல்ல வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

vinayagar

மனதார நம்பிக்கையோடு வேண்டிக் கொண்டு நாம் செய்யும் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் கை மேல் பலன் கொடுக்கும். நம்பிக்கை இல்லாமல் எவ்வளவு தான் செலவு செய்து, எவ்வளவு தான் ஹோமங்கள் நடத்தி எவ்வளவு பெரிய பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் அதற்கான பலனை நம்மால் அனுபவிக்கவே முடியாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குளங்களில் காசு போட்டால் இதெல்லாம் நடக்குமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -