உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை

Kadhal kavithai

என்னை மறந்துவிடு என
நீ கூறிச் சென்றாய்..
ஆனால் உன்னை மறக்க
நினைக்கும் ஒவ்வொரு நொடியும்
நான் மரண தண்டனை அனுபவிப்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்.

kadhal kavithai Image
kadhal kavithai Image

இதையும் படிக்கலாமே:
கொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை

மறப்பது என்ற வார்த்தை காதலின் அகராதியிலே கிடையாது. காதல் என்பது மனதில் இருக்கும் தழும்பு. அந்த தழும்பை எந்த மருந்து கொண்டும் அழிக்க முடியாது. காதலிக்கும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு காரணத்திற்காக பிரியும் சமயத்தில் என்னை மறந்துவிடு நான் உன்னை மறந்துவிட்டேன் என்று கூறுவது உண்டு.

உண்மையாக காதலித்தால் நிச்சயம் மறக்க முடியாது என்பது தான் உண்மை. அதையும் தாண்டி ஒருவர் பல வருடங்கள் கடந்து ஒருவர் தன் காதலை மறக்கிறார் என்றால் அவர்கள் மனதில் இனொரு காதல் துளிர் விட துவங்குகிறது என்று அர்த்தம். காதலும் ஒருவகை அன்பு தானே. அந்த அன்பை இனொருவரிடம் இருந்து பெறுகையில் மனம் மெல்லியதாகும் காதலின் வலிகள் மறைந்துபோகும். ஆனால் இதெல்லாம் ஒருநாளில் நிகழ்பவை கிடையாது. அதற்கு சில வருடங்கள் ஆகும்.

Love kavithai Image
Love kavithai Image

நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், அம்மா கவிதை, அப்பா கவிதை என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.