இல்லத்தரசிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக!

idiyappam-vatha-kolambu-kitchen
- Advertisement -

சமையல் கலையில் ரொம்பவும் முக்கியமான விஷயங்களை நுணுக்கமான குறிப்புகள் மூலம் கையாளுவதால் எளிமையாகிறது. சின்னஞ்சிறு குறிப்புகள் தான் சமையலை நேர்த்தியாகவும், சுவையாகவும் செய்ய உதவி செய்கிறது. அந்த வகையில் இல்லத்தரசிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 10 சமையல் குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

டிப் நம்பர் 1:
வீட்டில் தட்டை முறுக்கு தயாரிக்கிறார்கள் என்றால் அதில் அரிசி மாவுடன் சிறிதளவு கருவேப்பிலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை பவுடர் போல அரைத்து சேர்த்து செய்தால் தட்டை கரகரப்பாகவும், கமகமவென வாசம் வீசக்கூடியதாகவும் டேஸ்டியாக இருக்கும்.

- Advertisement -

டிப் நம்பர் 2:
இட்லி மென்மையாக பூ போல வருவதற்கு இட்லி மாவு அரைக்க அரிசி, உளுந்து ஊற வைக்கும் பொழுது ஒரு தேக்கரண்டி அளவிற்கு முழு கோதுமையை சேர்த்து ஊற வைத்து அரைத்து பாருங்கள் பஞ்சு போல இட்லி வேகும்.

டிப் நம்பர் 3:
காலையில் செய்த சாம்பார் இரவு வரை பயன்படுத்த முடியாது, சில சமயங்களில் கெட்டுப் போய்விடும். நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க சாம்பார் தயாரிக்கும் பொழுது சிறிதளவு வெந்தயம், தனியா, சீரகத்தை வறுத்து பொடித்து சேர்த்து செய்யுங்கள். இரவில் சூடு பண்ணினால் கூட புதிதாக சமைத்தது போல சூப்பராக இருக்கும்.

- Advertisement -

டிப் நம்பர் 4:
வீட்டில் இடியாப்பம் தயாரிக்கும் பொழுது ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மாவு பிசைந்து தயாரித்து பாருங்கள். இடியாப்பம் மெத்து மெத்துன்னு பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

டிப் நம்பர் 5:
வீட்டில் வடகம் தயாரிக்கும் பொழுது எடுத்த உடனேயே எண்ணெயில் பொறிக்காமல் முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து விட்டு பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூப்பராக பொரியும்.

- Advertisement -

டிப் நம்பர் 6:
வீட்டில் வத்த குழம்பு தயாரிக்கிறீர்கள் என்றால் கடைசியாக அதில் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து வையுங்கள், சாப்பிடும் பொழுது சுவை தூக்கலாக இருக்கும்.

டிப் நம்பர் 7:
கொழுக்கட்டைக்கு அரிசி மாவு அரைக்க போகிறீர்கள் என்றால் அதில் சிறிதளவு உளுந்தையும் சேர்த்து அரையுங்கள். அப்போது தான் நீங்கள் கொழுக்கட்டை பிடிக்கும் பொழுது வெடிக்கவும் செய்யாது, விரியவும் செய்யாது, மிருதுவாகவும் மென்மையாக இருக்கும்.

டிப் நம்பர் 8:
பருப்பு உருண்டை குழம்பு தயாரிக்கும் பொழுது சில சமயத்தில் குழம்பில் உருண்டைகள் கரைந்து போக வாய்ப்பு உண்டு. இப்படி உருண்டைகள் கரையாமலும், உடையாமலும் இருக்க நீங்கள் பருப்பு அரைக்கும் பொழுதே ஒரு பிடி பச்சரிசியை சேர்த்து அரையுங்கள். பின் உருண்டைகளை உருட்டினால் கரையாது, வெடிக்கவும் செய்யாது.

டிப் நம்பர் 9:
எப்பொழுதும் வாணலியில் எண்ணெய் காய்ச்சப் போகிறீர்கள் என்றால் முதலில் வாணலியை அடுப்பில் வைத்து லேசாக சூடாக வேண்டும். பிறகு எண்ணெய் ஊற்றினால் விரைவாக எண்ணெய் காய ஆரம்பித்து விடும், இதனால் கேஸ் மிச்சமாகும்.

இதையும் படிக்கலாமே:
நல்ல காரசாரமா சாப்பிடணும் நினைக்கிறவங்க இந்த செட்டிநாட்டு காரச் சட்னி அரைச்சு சுடச்சுட இட்லியோட சாப்பிட்டு பாருங்க .மூணு வேலையும் இந்த இட்லி காரச்சட்னி இருந்தாலே போதும்ன்னு சொல்லுவீங்க.

டிப் நம்பர் 10:
தேங்காயை உடைத்து அப்படியே பிரிட்ஜில் வைக்கக்கூடாது. தண்ணீரில் நன்கு கழுவி விட்டு பிறகு பிரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் பிசுபிசுப்பு அடையாது. அது போல மூடியை கவிழ்த்தி வைக்க வேண்டும், நேராக வைக்க கூடாது. இதனால் நீண்ட நாட்கள் தேங்காய் பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -